தியானம் (ஐப்பசி 14, 2026)
வேதனை உண்டாக்கும் வழிகள்
சங்கீதம் 139:24
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
ஒரு மனுஷக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். அவர்களின் இளை யவன், சிறு வயதிலிருந்து கீழ்படி மனதில்லாதவனும், தன் குற்ற ங்களை குறித்து மனம் வருந்தாமல் இருப்பதை அவன் பெற்றோர் அறி ந்திருந்தார்கள். ஆனால், பிள்ளை பாசத்தினால், பாடசாலையிலும், உறவுகள் மத்தியிலும், சபையிலும், அயலவர்கள் மத்தியிலும் அவனை காப்பாற்றி வந்தார்கள். அவனை திருத்துவதுக்கு பதிலாக, அவனுடைய வழிகளை நியாயப்படுத்தி வந் தார்கள். நீங்கள் அந்த பெற் றோராக இருந்தால், எத்தனை நாட்கள் அப்படியாக செய்து வரு வீர்கள்? நீங்கள் அவனை உண் மையாக நேசித்தால், அவன் சந்திக்க போகும் பின்விளைவு களைக் குறித்து கவலயடைந்திருப்பீர்கள் அல்லவா? உங்களிட த்திலே மனந்திரும்பும் சுபாவம் இருந்தால், அதை நீங்கள் உங்கள் பிள்ளைக ளுக்கு கற்றுக் கொடுப்பீர்கள் அல்லவா? 'பிள்ளையானவன் நடக்கவே ண்டிய வழியிலே அவனை நடத்து அவன் முதிர்வயதிலும் அதை விடா திருப்பான்.' (நீதிமொழிகள் 22:6). ஒரு குடும்பத்திலுள்ள பிள்ளை யாவன், தான் செல்லும் சபையிலே நடக்கும் குறையை குறித்து விமர் சிக்க ஆரம்பித்தான். எப்போதெல்லாம் அவனுடைய பெற்றோர் அவ னுடைய வாழ்விலுள்ள காரியங்களை குறித்து கரிசணையோடு பேசும் போது, அவன் தன் வழியை நியாயப்படுத்த, சபையின் குறைவுகளை பேசி வந்தான். அவனுடைய தகப்பனானவரோ, ஊரையும், உலகையும் திருத்த முன்பு, நீ உன் வழிகளை ஆராய்ந்து பார்த்து, மனந்திரும்பிக் கொள். சபை என்பது கட்டிடம் அல்ல, விசுவாசிகளின் கூட்டமே சபை. எனவே, சபையிலே இருக்கும் குறைகள் விசுவாசிகளின் வாழ்க்கையிலி ருக்கும் குறைகளை பிரதிபலிக்கின்றது என்று அவனைக் கடிந்து கொண்டு புத்திமதி கூறினார். கருப்பொருளாவது, சபையிலே குறைகள் இல்லை என்றும், அதை பாராமுகமாக விட்டுவிட வேண்டும் என்ப தல்ல, மாறாக, மற்றவர்களை நோக்கி பார்ப்பதற்கு முன் அவன் தன் மனந்திரும்ப விருப்பமில்லாத மனதை திருத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களிலே பெற்றோரும் பிள்ளைகளோடு சேர்ந்து மற்றவர்க ளுடைய குறைகளிலே அதிக கவனத்தை செலுத்துவதுண்டு. அதன் பின்விளைவுகள், கனி கொடுக்கும் காலத்திலே வெளியாகும். நீங்க ளோ, வேதனை உண்டாக்கும் வழிகளை விட்டு விலகி, கர்த்தரின் இரக்கத்தை நாடுங்கள்.
ஜெபம்:
என்தேவனாகிய கர்த்தாவே, என்னை ஆராய்ந்து, என் இருத யத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்த என்னை வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:6