புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2026)

மனந்திரும்புதலின் அவசியம்

லூக்கா 15:7

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


ஆண்டவர் இயேசு கூறிய கெட்ட குமாரன் உவமையை குறித்து அறிந் திருக்கின்றீர்கள். அந்த உவமையிலே முக்கிய மூன்று பாத்திரங்களா கிய: தகப்பனாவனர், தகப்பன் வீட்டிலிருந்து அவருடைய சித்தத்தை செய்த மூத்த குமாரன், தன் தகப்பானானவரை விட்டு தூர தேசத்திற்கு சென்ற இளைய குமாரன். இந்த பாத்திரங்களிலே, இளைய குமாரனை, கெட்ட குமாரன் அல்லது ஊதாரிப்பிள்ளை என்று நாங்கள் அழைக் கின்றோம். இளைய குமாரன், ஆஸ் திகளின் தன்னுடைய பங்கைசேர் த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். தன்னுடைய இச்சையின்படி செயற்பட்ட அவனு டைய வாழ்வு ஒரு சில நாட்களுக்கு உல்லாசமாக இருந்திருக்கும். அவன் சென்ற இடத்திலே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். அதாவது, உலக நீதி நியாங்களின்படி இளைய குமாரனுக்கு அவன் தகப்பன் வீட்டிலே பங்கு இல்லை. அவனுக்கு புத்தி தெளிந்த போது, தன் பரிதாப நிலைமையை உணர்ந்து கொண்டான். தன் இருதயத்தை தாழ்த்தினான். தான் விட்டு வந்த தகப்பனா னவனுடைய வீட்டிற்கு திரும்பி செல்ல தீர்மானித்தான். ஊரார் அவனை தூற்றுவார்கள். தகப்பனுடைய வீட்டிலே வேலை செய்பவர்கள் அவ னை அவமதிக்கக்கூடும். தகப்பனும், மூத்த சகோதரனும், ஒரு வேளை, அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அவையொன்றையும் பொருட்ப டுத்தாமல், தகப்பன் வீட்டிலே வேலைக்காரனாக இருப்பேன் என்று எண்ணிக் கொண்டு, தான் இருக்க வேண்டிய இடத்திற்கு திரும்பினான். புpரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய நாட்களிலே, இந்த எண்ணமானது விசுவாசிகள் மத்தியிலே குறுக் கொண்டு போகின்றதை காணக் கூடியதாக இருக்கின்றது. சிலர், செய்கின்ற காரியங்களை யாவையும் தங்கள் சுய இச்சைப்படி செய்து விட்டு, அதனால் மற்றவர்களுக்கு உண்டாகிய நஷ;டங்களையும், நிந்தைகளையும் உணராதவர் களைப் போல இருந்து விடுகின்றார்கள். மனந்திரும்ப மனதில்லை. மனந்திரும்பும் இருதயம் இல்லாமல் ஒரு கிறிஸ்தவனாக வாழ முடியாது. சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், மற்றவர்களு க்கு காண்பிக்கும்படி தேவ ஊழியங்களை முன்னெடுத்துச் செல்கின்றா ர்கள். அப்படியிருக்கலாகாது, நாம் நம்முடைய இருதயத்தை தேவ னுக்கு கொடுக்கும் போது, நாம் செய்ய வேண்டிய காரியங்களை அவர் நமக்கு போதித்து, நடக்க வேண்டிய வழியை காண்பிப்பார்.

ஜெபம்:

மனந்திரும்புகின்ற இருதயத்தை விரும்பும் தேவனே, நான் பெருமையுள்ளவனாக வாழாதபடிக்கு, தாழ்மையுள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்து உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடத்திச் செல்வாராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:6