தியானம் (ஐப்பசி 09, 2026)
மறுரூபமடையும் வாழ்க்கை
2 கொரிந்தியர் 4:16
உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
கடந்த நாளிலே பிலமோனுக்கு எழுதிய நிருபத்திலுள்ள மூன்று முக்கிய பாத்திரங்களாகிய: வேலைக்காரனாகிய ஒநேசிமு, அவனுடைய எஜமா னனாக இருந்த பிலமோன், இருவரையும் இரட்சிப்புக்குள் நடத்திய தேவ ஊழியராகிய பவுல் ஆகியோரைப் பார்த்தோம். ஒரு விசுவா சியானவன் வாழ்க்கையில், வௌ;வேறு சந்தர்ப்பங்களிலே இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் இருக்க நேரிடுகின்றது. சில சந்தர்ப்பங்களிலே, ஒநேசிமுவைப் போல மனந்திரும்பி மன்னிப்பை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில சந்தர்பங்க ளிலே, நியாயம் அந்த விசுவாசி யின் பக்கம் இருந்தாலும் மன்னிப்பை வழங்க வேண்டும். இன்னும் சில சந்தர்பங்களிலே தேவ உழிய ராகிய பவுலைப் போல ஒப்புரவாக்குகின்றவர்களாய், சமாதானம் செய்கின்றவர்களாய், பரிந்து பேசிகின்றவர்களாய் இருக்க வேண்டும். பிரச்சனைகளைவிட்டு ஓடிச் செல்வதால் இரட்சிப்பானது பூரணப்பட்டு போவதில்லை. இது பழைய பிரச்சனை என்று பராமுகமாக விட்டுவிடவும் முடியாது. மற்றவர்கள் முன்னிலையிலும், தேவ சமுகத்திலும் ஒவ்வொரு விசுவாசியும் மனந்திரும்புதலின் கனிகளை காண்பிக்க வேண் டும். துரோகம் செய்த ஒருவன், ஒடிச் தான் இருக்க வேண்டிய இடத்தைவிட்டு சென்றுவிட்டு, சென்ற இடத்திலே தான் கிறிஸ்தவன், ஊழி யம் செய்கின்றேன் என்று கூறி, பற்பல கிரியைகளை நடப்பித்து, ஒருவேளை தன் நிலையை மற்றவர்களுக்கு முன் நியாயப்படுத்திக் கொள் ளலாம். அவன் தன் வாழ்விலே மனந்திரும்புதலின் கனியை காண்பிக்கும்வரைக்கும் அவனுடைய இருதயத்திலே பூரண சமாதானம் தங் காது. ஏனெனில், அவன் இருதயத்தின் ஒரு முளையிலே, முட்செடி போன்று அவனை குத்தும் துரோகம் தங்கி இருக்கும். மன்னிப்பை பெற்று கொள்ள வேண்டும் என்று வார்த்தையில் கூறுவதும், பிரசங்கி ப்பதும் இலகுவான காரியம். ஆனால், நடைமுறை வாழ்க்கையிலே அது மிகவும் கடினமானது. சில வேளைகளிலே மனித பெலத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேவன்தாமே அதை நிறைவேற்றி முடிக்கும் படிக்குரிய கிருபையை அளிக்கின்றார். சத்திய ஆவியானவர் கண்டி த்துணர்த்தும் போது, அதை ஒரு விசுவாசியானவன் ஏற்றுக் கொண்டு, அவர் காட்டும் வழியிலே நடக்கும் போது, சாத்தியமற்ற காரியங்கள் அவன் வாழ்க்கையிலே நிஜமாகிவிடுகின்றது. இது ஒருமுறையோடு முடிந்து போவதில்லை. மாறாக நாளுக்கு நாள் மனம் மறுரூபமாக்கப்பட வேண்டும்.
ஜெபம்:
இருளான வாழ்க்கையிலிருந்து என்னை மீட்ட தேவனே, மனந்திரும்புதலின் கனியை என் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் காண்பிக்கும் பொருட்டு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:1-2