தியானம் (ஐப்பசி 01, 2026)
திரும்பி பாருங்கள்!
எபேசியர் 4:32
கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இந்த ஆண்டிலே ஒன்பது மாதங்களை கடந்து வந்துள்ளோம். தேவனா கிய கர்த்தர்தாமே இதுவரைக்கும் நம்மை காத்து வழிநடத்தி வந்திரு க்கின்றார். அவர் இன்னமுமாய் அப்படியே செய்வார். அழைத்தவர் உண்மையுள்ளவர்! கடந்து வந்த மாதங்களை சற்று திரும்பி பாருங்கள். கர்த்தர் நடத்தி வந்த வழிகளை உங்கள் படுக்கையில் இருக்கும் போதும் தியானியுங்கள். அவரு டைய நன்மைகளுக்காய் மனதார நன்றியைத் தெரிவியுங்கள். 'என் னிடத்திலே வேதனை உண்டாக் கும் வழிகள் ஒன்றும் இருந்ததி ல்லை' என்று யார் தேவனை நோக்கி கூற முடியும்? ஓவ்வொரு விசுவாசியும் 'நான் நிர்மூலமாகதிருப்பது தேவ கிருபை' என்று கூறு வது மட்டுமே தகுதியுள்ளதாயிருக்கும். துவறிப்போன இடங்கள், வழி விலக்கிப்போன சந்தர்பங்கள், வார்த்தையை கேட்காமல் அசட்டையாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். பிதாவின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கும் நம்முடைய மீட்பராகிய ஆண்டவர் இயேசு நமக்காக பரிந்து பேசுகின்றார். ஒவ்வொரு விசுவாசியின் குற்றங்களிலும் தேவ இரக்கம் வெளிப்படுகின்றது. அவர்களுக்கு மன்னிப்பை அருளுகின்றார். மன்னிப்பின் மாட்சிமையே கிறிஸ்தவத்தின் அடித்தளமானது. மன்னி ப்பை அறியாதவன் இன்னும் கர்த்தரை அறியவில்லை. மன்னிக்க மறுகி ன்றவன் அவரை அறிந்தும் அறியாமல் வாழ்கின்றான். இந்நாட்களிலே கிறிஸ்தவ வாழ்விலே மன்னிப்பின் அவசியத்தை, தேவ ஊழியராகிய பவுல் பிலமோன் என்னும் உடன் வேலையளுக்கு எழுதிய நிருபத்தை மையமாக வைத்து தியானிக்கப் போகின்றோம். பரிசுத்த வேதாக மத்திலே, புதிய ஏற்பாட்டில், 18வது புத்தகம். இந்த புத்தகம் ஒரு நிருபம், இதில் ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. 25 வசனங்கள் கொண்ட பிலமோனுக்கு எழுதப்பட்ட இந்த குறுகிய நிருபத்திலே, மன்னிப்பின் அவசியத்தையும், அதன் மேன்மைiயும், ஆழமாக கற்றுக் கொள்ளலாம். சமாதானமான வாழ்விற்கென்று அழைப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, கிறிஸ்து எப்படி பரலோகத்தோடு உங்களை ஒப்புரவாக்கினார் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். புpதாவாகிய தேவன்தாமே நம்மை தம்முடைய சொந்த பிள்ளைகளாக மாற்றினார்.
ஜெபம்:
என்மீது அன்புகூர்ந்து உம்முடைய ஒரே பேறான குமாரனை எனக்காக தந்த பிதாவாகிய தேவனே, உம்முடைய மன்னிப்பின் மேன் மையை உணர்ந்து வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:14