தியானம் (புரட்டாசி 28, 2026)
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்
ரோமர் 2:6
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவ ர்களும் உங்களுக்கு வாழ்த் துதல் சொல்லுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டிலுள்ள நிருபங்களில் 13 நிருபங்கள் தேவ ஊழியராகிய பவுல் வழியாக எழுதப்பட்டது என்பதை நிருபத்தின் முகவுரையிலே காணலாம். அவைகளில் எபேசியர், பிலிப்பியர், கொலோசேயர் மற்றும் பிலமோன் ஆகிய 4 நிருபங்கள் தேவ ஊழியராகிய பவுல், சிறையில் இருந்து எழுதினார். அதாவாது, கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் அவர் ரோமா புரியிலே சிறையில் காவலிலே வைக்கப்பட்டிருந்தார். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிரு ந்து பிலிப்பிய நிருபத்தை மைய மாக வைத்து அதன் கருப்பொரு ளை தியானித்து வருகின்றோம். தேவ ஊழியர், தான் சிறையிலே இருந்த போதும், அதை குறித்து கவலைய டையாமல், அங்கும் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். அதே வேளையிலே, பிலிப்பிய சபையிலுள்ள விசுவாசிகள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடற லற்றவர்களுமாயிருக்கவும் தேவையான அறிவுரைகளை அவர் வழி யாக தேவ ஆவியானவர் அருள் செய்திருக்கின்றார். இந்த நிருபத்திலே கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பதை குறித்து வலியுறுத்திக் கூறியி ருக்கின்றார். ஒரு விசுவாசி சந்தோஷமாக இருக்க வேண்டும். அது மட் டும் அல்ல, அந்த சந்தோஷத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரகசியத்தை மற்றய விசுவாசிகளுக்கும் கூற வேண் டும். அன்றைய நாட்களிலே, தேவ ஊழியராகிய பவுலோடு கூட, இன் னும் சிலர், கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் அவரோடு கூட சிறை யிலிருந்தார்கள். அவர்கள் யாவரும் கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடு வ தற்கு தயகமடையவில்லை. தங்கள் வாழ்விலே விசுவாசத்தின் நல்ல போராட்டதை போராடுகின்ற வேளையிலே, மற்றயவர்களும் தேவ ராஜ் யத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் வஞ்சிக் கப்பட்டு போய்விடக்கூடாதென்பதற்காகவும் அவர்களை உற்சாகப்படு த்தினார்கள். நிருபத்தின் முடிவிலே, 'பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த பிரகாரமாகவே, தேவ ஆவியை பெற்ற நாமும், ஒருவரை ஒருவர் உற் சாகப்படுத்த வேண்டும். உபத்திரவங்களிலே சோர்ந்து போகாதபடிக்கு இனிவரவிருக்கும் ஈடில்லாத மகிமைiயை விசுவாசக் கண்களால் கண்டு, அதைக் குறித்து சந்தோஷமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
என்னை பெலப்படுத்தும் தேவனே, எமக்குமுன் வைத்திருக்கும் சந்தோஷத்தை விசுவாசிக் கண்களால் கண்டு, உணர்ந்து, இந்த உலகத்தினால் உண்டாகும் உபத்ரவத்தில் சோர்ந்து போகாமல் இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:1-4