தியானம் (புரட்டாசி 27, 2026)
கருத்துள்ள வாழ்த்துதல்
நீதிமொழிகள் 29:5
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப் போலிருக்கும்.
மழலைப் பருவதிலிருந்து தன் தாயாரை அம்மா என்று அழைத்து வந்த பிள்ளையாவன், அவன் வளர்ந்து பெரியவனாகிய போது, அவனை நோக்கி: நீ உன் தாயாரை அம்மா என்று கூப்பிடுவதற்கு பதிலாக, இனி அற்குரிய ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தி தாயாரை கூட்பிட்டுக் கொள் என்று கூறினாள், ஆங்கில வார்த்தையின் அர்த்தம் சரியாதாக இருந்தாலும், அந்த வார்த்தை யானது அவன் உள்ளத்திலே உணர்வற்றதாக இருக்குமல்ல வோ? அதே போல இன்று மனி தர்கள் காலை வந்தனங்களை ஒருவருக்கொருவர் அவசரவச ரமாக கூறி சென்று விடுகின்றா ர்கள். விசுவாசிகள் மத்தியிலும், ஒருவரை ஒருவர் வாழ்த்துவதற்கு, சில சொற்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். சற்று தரித்திருந்து சிந்தித்துப் பார்க்கும் போது, அந்த சொற்களின் அர்த்தத்தை சிந்தித்து உணர்ந்து கூறுகின்றவர்கள் ஒரு சிலரே. ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, தீர்க்கதரிச புத்தகதிலுள்ள வார்த் தையை தம்மைப் பின்பற்றுவோருக்கு ஞாபகப்படுத்தினார். 'இந்த ஜன ங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனு ஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.' அதவாது, வாயி னாலே பேசப்படும் வார்த்தைக்கும், அவர்கள் மனதின் யோசனைக ளுக்கும், அவர்கள் செய்யும் கிரியைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் மற்றவர்களை வாழ்த்தும் வாழ்த்துதல் அப்படியாக இரு க்கக்கூடாது. அப்படியாக இருக்குமாயின், நாளடைவிலே மற்றவர்கள் அது வெறும் முகஸ்துதி என்பதை உணர்ந்து கொள்வார்கள். இன்று விசுவாசிகள் மத்தியிலும் உணர்வற்ற நிலைகள் காணப்படுகின்றது. ஏனெனில், சிலர் தாங்கள் அறிந்து உண்மையைவிட்டு விலகி, நாகரீக மாக தோன்றும் உலகத்தின் போக்கை பின்பற்றிக் கொள்கின்றார்கள். சில சமயங்களிலே, தேவனுடைய நாமத்தை தரித்தவர்கள், இருதயக் கடினத்தினாலும், உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களினாலும் சுயநலமு ள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். சக விசுவாசிகளை விசாரிப்பதை பேச்சளவிலே நிறுத்தி விடுகின்றார்கள். நீங்களோ அப்படியிராமல், நீங்கள் கூறும் வாழ்த்தலும், உங்கள் விசாரிப்பும், தேவனுக்கும் மற்றய மனிதர்களுக்கும் முன்பாக உண்மையுள்ளதாக இருப்பதாக. இருதங் களை ஆராய்தறிகின்றவர் உங்கள் சிந்தையை அறிந்திருக்கின்றார்.
ஜெபம்:
பரலோக தேவனே, பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால் களுக்கு வலையை விரிக்கிறான் என்ற பிரகாரமாக என் பேச்சுக்கள் இல்லாதபடிக்கு என் பேச்சுக்கள் உமக்கு முன்பாக உண்மையுள்ளதாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-2