தியானம் (புரட்டாசி 18, 2026)
ஞானத்தை தரும் தேவன்
தானியேல் 1:17
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்
பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டு, கைபற்றினான். ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் சிறைப்பிடித் தார்கள். அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷh வேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு பாபிலோனின் எழுத்தையும் பாiஷயையும் கற்றுக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார் கள். இவர்களோடு வேறு அநேகர் இருந்தபோதும், 'இந்த நாலு வாலி பருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தி யத்தையும் கொடுத்தார்; தானியே லைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். ராஜா அவ ர்களோடே பேசினான்; அவர்கள் எல் லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷhவேல், அசரியா என்ப வர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர் கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர் களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.' பிரியமான சகோதர சகோ தரிகளே, அந்த வாலிபர்களைப் போலவே, இன்றும் இந்த உலகத்திலே விசுவாச மார்கத்தார் அநேக பாடங்களை கற்றுக் கொள்ளும்படி பணி க்கப்படுகின்றார்கள். அந்த பாடங்களிலே உலகத்தாரும் பாண்டித்தியம் பெற்றுக் கொள்கின்றார்கள். பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத் நேச்சாருக்கு 'பரலோகத்தின் தேவன் அவனுக்கு ராஜரிகத்தையும் பராக் கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளியிருந்தார்;.'அந்த ராஜ்யத்த்திற்கு ஒத்ததாக வேறொரு ராஜ்யம் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஆப்படிப்பட்ட மேன்மையுள்ள ராஜ்யத்தின் ராஜா, தேவ பிள்ளைகளை, கற்றுத் தேறிய பெற்ற மற்ற வாலிபர்களைவிட 10 மடங்கு ஞானவான்களாக கண்டான். இது தேவனால் உண்டானது. அந்த தேசத்தாருக்கு இவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட வாலிபர்கள் அந்நிய தேசத்திலே, ராஜா குமாரர்கள், பிரபுக்கள் அதிகாரிகள், ஜனங் கள் முன்னிலையிலே தேவன் இவர்களை உயர்த்தி, இவர்கள் குறை வை நிறைவாக்கினார். எனவே, உலகத்தின் போக்கினால் இழுப்புண்டு போகாமல், தேவனுடைய வார்த்தைக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.
ஜெபம்:
உம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சம்பூரணமாய் ஞானத்தைக் கொடுக்கிற தேவனே, இந்த உலகத்தின் போக்கிலே நான் வாழாமல், உம்முடைய வழியிலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:5