புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2026)

கர்த்தருக்கு பயந்திருங்கள்

சங்கீதம் 34:9

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.


தன் தகப்பனானவருடைய கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்த தாவீது என்னும் இளைஞனை, தேவனாகிய கர்த்தர்தாமே, தேசத்தின் ராஜாவாகும்படி அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, அவன் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக வரும்வரைக்கும் அநேக துன்பங்களை பாடுகளையும் அவன் கடந்து சென்றான். அவற்றுள் சில அவன் தன் சுய இச்சசைகளினாலே தேடிக் கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் தேசத்தின் ராஜாவான பின்பும் அவனுக்கு பல உபத்திரவங்கள் உண்டாயிருந்தது. வாழ்விலே குறைவகள் ஏற்பட்டிருந் தது. அவை யாவற்றின் மத்தியிலேயும், அவன் பாடின பாடல்களை சங்கீதப் புத்தகத்திலே வாசித்துப் பாருங்கள். 'கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல் லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேக ராயிருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். நான் படுத்து நித்திரை செய் தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.' மேலும் நாம் யாவரும் 23வது சங்கீதத்தை நன்றாக அறிந்திருக்கின்றோம். 'கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.' அதவாது, அடுத்தது என்ன என்று தெரியதா நிலைமைகள் உண்டாயிருந்தது. ஓநாய்கள் ஆடுகளுக்குள் வருவதைப் போல எதிரிகள் சூழ்ந்து கொள்கி ன்றார்கள். ஆத்துமா தொய்ந்து போகக்கூடிய சூழ்நிலைகள் உண்டு. அவை யாவற்றின் மத்தியிலும், கர்த்தர்மேல் கொண்டுள்ள நம்பிக்கை யிலே மிகவும் உறுதியாக இருந்தார். 34ம் சங்கீதத்திலே, அவர் பாடுகை யில், 'இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடு க்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.' என்று அறிக்கை செய்தான். ஆம் பிரியமானவர்களே, மேகம் போன்ற சாட்சிகள் நம்மை சுற்றி சூழ இருக்கின்றது. எனவே, குறைவுகளை கண்டு மனம் சோர்ந்து போகாமல், நிறைவாக்கும் தேவனாகிய கர்த்தரை நோக்கி பாருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் தீமையை விட்டு விலகி, நன்மைசெய்து சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்ளும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 63:1