புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2026)

தேவனை நோக்கிக் காத்திரு

சங்கீதம் 42:5

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.


தேவனாகிய கர்த்தரை நாடி, அவரிலே சார்ந்திருந்த பக்தர்கள், பாடின சில சங்கீதங்களை சற்று தியானிப்போமாக. 'தாயின் பால்மறந்த குழந் தையைப்போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.' (சங்கீதம் 131:2) 'நிணத்தையும் கொழுப் பையும் உண்டதுபோல என் ஆத் துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுக ளால் உம்மைப் போற்றும்.' (சங்கீதம் 63:5). 'நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலா கிறது.' (சங்கீதம் 103:5). அப்படி யானால், கர்த்தரை அறிந்தவர்கள், அவருடைய ஜனங்கள் ஏன் மனத்திருப்பதியற்று மனம் பதைக்கின்றார்கள்? ஏன் சந்தோஷத்தை இழந்து போகின்றார்கள். தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முடைய ஜனங்களை குறித்து கூறும் போது: 'என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவி கொடுக்கவில்லை. இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள். ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.' என்று கூறியிருக்கின்றார். விசுவாசிகள் யாவரும் ஞாயிதோறும் தேவனுடைய வார்த்தைகளை கேட்கின்றார்கள். பொதுவாக யாவரும் வேதத்தை கற்றுக் கொள்கின்றார்கள். சக விசுவாசிகளுக்கு ஆலோசனைகளை கூறிக் கொள்வார்கள். ஆனால், குறித்த சந்தர்ப்பங்களிலே, கற்றுக் கொண்டவைகள் தங்கள் வாழ்க் கையிலே நடைமுறைப்படுத்த தவறிவிடுகின்றார்கள். அதனால், வாழ்க்கைப் படவிலே மோதும் அலைகளை கண்டு பயந்து, தவறான தீர்மானங்களை எடுத்து விடுகின்றார்கள். இதனால், அவர்கள் மன நிம்மதியை இழந்து அலைந்து திரிகின்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ஜெபம்:

என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக் கலமுமான தேவனே, உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்கள் அசைக் கப்படுவதில்லை. நான் எப்போதும் உம் வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:1-2