தியானம் (புரட்டாசி 06, 2026)
போதுமென்கிற மனது
1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
மனிதர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை தங்கள் தேவைகளை சந்திப்பதிலே செலவிடுகின்றார்கள். பொதுவாக தேவைகள் என்று இவ் உலகத்திலுள்ள மனிதர்கள் கூறும்; போது, அதற்குள்ளே ஒரு மனிதனத னவன் உயிர்வாழ்வதற்கு தேவையானவைகளும், அவனுடைய ஆசை விருப்பங்களும் அடங்கியிருக்கும். மனிதனுடைய மனதின் ஆசைக்கு முடிவில்லை. அதனால் அவன் மனதிருப்தியடைவதுமி ல்லை. தன் வாழ்நாள் முழுவதும் வசதியைத் தேடி ஓடுகின்றவனாக இருக்கின் றான். தேவ ஊழியராகிய பவுல், இள வயதுடைய ஊழியனாகிய தீமோத் தேயுவுக்கு எழுதும் போது: போது மென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். ஊலக த்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்க வும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமு மான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு' என்றார். யார் மனதிருப்தியை அடைந்து கொள்கின்றார்கள்? யார் எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்யமாக இருக்க கற்றுக் கொள்கின்றார்கள்? தேவனுடைய வசனத்தை வாஞ்சையோடு கேட்டு, அதை தியானித்து, அதை தங்கள் வாழ்விலே நடைமுறைப்படுத்திக் கொள்கின்றவர்கள் தங்கள் ஆத்துமாவிலே திருப்பதியடைகின்றார்கள். அவர்கள் மேலானவைகளை தங்கள் விசுவாசக் கண்களினால் காண்பதினாலே, அவைகளையே நாடித் தேடுகின்றார்கள். அவர்களுடைய பொக்கிஷம் இந்த பூமிக்குரியவைகள் அல்ல. அவர்கள் அழியாத பரலோக பொக்கிஷத்தை தங்களுடையதாக்கிக் கொண்டிருப்தால், அவர்கள் இந்த பூமியில் செல்வத்தைக் குறித்து கவலையடைவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்விலே முதலாவதாக தேவனுடைய ராஜ்யத் தையும் அதன் நீதியையை வைத்திருக்கின்றார்கள். அதையே அவர்கள் நாடித் தேடுகின்றார்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, என் கண்களை இந்த பூலோகத்தின் பொரு ட்கள் மேல் வையாமல், பரலோ ராஜ்யத்தை எப்போதும் நாடித் தேடுகின்றவனாக இருக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 27:20