தியானம் (ஆவணி 30, 2026)
சூழ்நிலைகளுக்கு மேற்பட்ட தேவன்...
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
மேற்கத்தைய நாடொன்றிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், ஓய்வு பெறும் நாட்கள் அண்மித்த போது, நல்ல வசதியான, அமைதியான ஊர் ஒன்றிலே மிகுதியான வருடங்களை கழிக்க வேண்டும் என்று ஆசை ப்பட்டான். அப்படியாக, களவு கொள்ளை இல்லாத, புயல், சூறாவளி மிகவும் குறைந்த ஒரு ஊரை தெரிந்து கொண்டு, அங்கே குடியேறி னான். மாதங்கள் கடந்து சென்ற போது, தன்னுடைய தீர்மானத் தைக் குறித்து அவன் சந்தோஷம டைந்தான். அந்த ஊர் வாழ்வ தற்கு ஒரு நல்ல இடமாகவே இரு ந்தது. ஆனால், ஒரு சில வருடங்க ளுக்கு பின்பு, சில சந்தர்பங்க ளிலே, அந்த ஊரிலே பூகம்பம் வரும்மென்பதை அவன் அறிந்த போது, மனம் உடைந்து போனான். நித்திய இளைப்பாறுதலுக்கென்று அழைக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, விசுவாசிகளு டைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே போராட்டங்கள் ஒன்றின்பின் ஒன் றாக வரும் காலங்கள் உண்டு. அதே வேளையிலே, வாழ்க்கையிலே அமைதி நிலவும் நாட்களும் உண்டு. இவை யாவும் மனுஷர்களுக்கு இந்த பூமியிலே நேரிடுகின்றது. ஆனால், விசுவாசிகள் இன்னமும் இந்த பூமியிலே, அவர்கள் வாழும் நாட்களிலுள்ள உலகத்திலேயே வாழ்கின் றார்கள் என்பதை மறந்து போய்விடக்கூடாது. தாவீது ராஜாவவின் வாழ்க்கையிலே அதிக துன்பங்கள் ஏற்பட்ட வருடங்கள் உண்டு. கர்த்தர் தாமே தாவீது ராஜா சென்ற இடமெல்லாம் வெற்றியை கொடுத்தார். பின்பு, தாவீது ராஜாவின் வாழ்;க்கையிலே அமைதியின் நாட்கள் உண் டாயிருந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. அதுபோலவே, விசுவாசி ளாகிய உங்களுடைய வாழ்க்கையிலே, இந்தப் பூமியிலே நிரந்திர, நித்திய இளைப்பாறுதல், உண்டாகும் என்று எதிர்பார்த்து வாழ்ந்தால், அது உங்களுக்கு பெரிதான ஏமாற்றத்தை உண்டு பண்ணும். ஆனால், கற்றுக் கொடுக்கின்ற ஆவியானவர்தாமே, விசுவாசிகள் எல்லா சூழ்நி லைகளிலும் மன அமைதலோடு வாழ கற்றுக் கொடுக்கின்றவராக இருக்கின்றார். சூழ்நிலைகளினால் தளர்ந்து போகாமல் இருக்க கற்றுக் கொள்வதே பெரிதான பெலமாக இருக்கின்றது. எனவே, இந்த பூமி யிலே எப்போதும் அமைதியான சூழ்நிலைகள் உள்ள இடங்கள் உண்டு என்று கருதி, அதை நோக்கி ஓடாமல், உயர்விலும், தாழ்விலும், வேதனை யிலும், சோதனையிலும் உலகத்தை ஜெயித்த கிறிஸ்துவுக்குள் மனரம் யமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
எல்லா சூழ்நிலைகளைப் பார்கிலும் பெரிய தேவனே, உலகத்தை ஜெயித்த உம்முடைய திருக்குமாரனாகிய கிறிஸ்துவிலே நிலைத்திருந்து நானும் ஜெயங்கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 16:33