புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2026)

கற்றும் கொள்ளும் பதையிலே...

ரோமர் 15:13

பரிசுத்த ஆவியின் பலத்தினா லே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கை யின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.


ஒரு சிறு பையனானவன், சைக்கிள் ஓட்டுவதற்கு தனக்கு கற்று தரும்படி தன் தகப்பனானவரிடம் கேட்டுக் கொண்டான். இந்த செய்கை தன் மகனானவனுடைய வளர்சிக்கு ஒரு அறிகுறி என்று சந்தோஷத்தோடு, தகப்பனானவரும், பரபரப்போடு சைக்கிள் ஓட்டுவதற்கு வேண் டிய பயிற்சியை ஆரம்பித்தார். ஆரம்பம் நன்றாக இருந்தது, ஆனால், நாட்கள் கடந்து செல்லும் போது, சிறுபையனானவன், சைக்கிளை ஓட்டுதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். சில திருப்பங்களிலே பயந் ததினால், விழுந்துவிட்டான். சில இடங்களிலே, கவனக் குறைவினால், தடுமாறி மரத்தோடு மோதிக் கொண்டான். அதனால், மனச்சோர்ந்து, சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து கொண் டே போயிற்று. ஒரு வகையான வெறுப்பு மனதிலே ஏற்பட்டது. இது எனக்கு சரிவராது என்று எண்ணிக் கொண்டான். அவனுடைய தாயானவளோ, அவனுக்கு தயவுடன் அறிவுரை கூறினாள். அவனை பல வழிகளிலே உற்சாகப்படுத்தி வந் தாள். தான் தவறுகள் செய்த இடத்திலே மிகவும் கவனமாக இருந்தான். ஒரு சில கிழமைகளில், சைக்கிளை நிதானமாக ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டான். நாட்கள் செல்ல செல்ல சைக்கிள் ஓட்டுவதற்கு அவனுக்கு பழக்கமாயிற்று. அதனால், இனி ஒரு விபத்தும் ஏற்படாது என்பது பொருளல்ல. கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, மேற்கூற ப்பட்ட சந்தர்ப்த்திற்கு ஒத்ததாக, எந்த ஒரு விடயத்தையும் கற்றுக் கொள்வதின் பாதையிலே, தவறுகளும், வெறுப்புக்களும் உண்டாகலாம். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையும் அப்படியாக இருக்கின்றது. ஒரு ஆணும் பெண்ணும் திருமண ஒப்பந்தத்திற்குள் தங்களை உட்படுத்தும் போதும் அல்லது ஒரு விசுவாசியானவன், தன்னை முழுநேர ஊழியத்தி ற்கு ஒப்புக் கொடுக்கும் போதும், அங்கே பரபரப்பும், உற்சாகமும், பாரா ட்டுதலும், கொண்டாட்டங்களும் இருக்கும். நாட்கள் கடந்து செல்லும் போது, முகங் கொடுக்கும் அனுவங்கள் கடினமாக இருக்கும். அதிலே நின்றுவிடாமல், தடைகளை தாண்டி செல்ல, உற்சாகத்தின் ஆவியானவர் விசுவாசிகளோடு இருக்கின்றார். உயிர்ப்பித்து வழிநடத்தும் வேத வார்த்தைகள் உண்டு. ஊக்குவிக்கும் சகோதர சகோதரிகள் சிலர் எப்போதும் சூழ இருப்பார்கள். எனவே கஷ்டங்கள் மத்தியிலே மனம்தளர்ந்து போகாமல், கற்றுக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள்.

ஜெபம்:

சத்திய வழியிலே நடக்க கற்றுத் தரும் தூய ஆவியை எனக்கு தந்தருளின தேவனே, தடுமாறும் வேளையில்இ நான் சோர்ந்து பின்னிட்டு போகாமல், கற்றுக் கொண்டு முன்னேற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:7