தியானம் (ஆவணி 21, 2026)
கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
சங்கீதம் 62:5
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
இந்நாட்களிலே, சில இடங்களிலே, சபை அங்கத்தவர்கள், நிர்வாகம் என்ற போர்வையிலே, சபை ஊழியரை ஒடுக்குவதும், வேறு சில இட ங்களிலே, தன்னாதிக்கம் உள்ள சில ஊழியர்கள், விசுவாசிகள் மேல் அதிக அழுத்தத்தை செலுத்துவதையும், ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கின்றது. பொதுவாக, பொருளாதாரமே இந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருக்கின்றது. இரண்டு பகுதியினரும், தங்களுடைய அழை ப்பின் பிரதானமான நோக்கத்தையும், அழைத்தவர் இன்னார் என்பதையும், அவரே நம்மை விசாரிக்கின்றவர் என் பதையும் மறந்து போய்விடக்கூடாது. கொடுக்கப்பட்ட பதவிகள், பொறுப் புக்களை நல்ல உக்கிரணக்காரனைப் போல பயன்படுத்த வேண்டும். முதலாதவதாக, விசுவாசிகளே: உங் களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்க த்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களு க்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபி ரெயர் 13:17). அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப் பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களு டைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். (1 தெச 5:12-13). அதே வேளையில் ஊழியர்களே: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட் டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்க ளாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது மகிமை யுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். (1 பேதுரு 5:2-4). கர்த்தரே யாவரையும் விசாரிக்கின்றவர் என்பதையும், அவருக்கே நாம் யாவரும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் மறந்து போய் விடாதிருங்கள். எனவே, அவரை நம்பி, அவருடைய வார்த்தையிலே நிலைத்திருந்து, அவருடைய வேளைக்காக காத்திருங்கள். தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள்.
ஜெபம்:
என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமு மான தேவனே, உம்மை நம்பி உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 37:5