புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2026)

குறைவிலே உதவி செய்யும் சுபாவம்

பிலிப்பியர் 4:10

என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்


பிலிப்பிய நிருபத்தின் ஆரம்பத்திலே தேவ ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பிய சபையோரின் உதாரத்துவமாக கொடுக்கும் அவர்களுடைய சுபாவத்தை குறித்து, பாராட்டி, அதற்கு நன்றியை தெரிவித்தார். அத்தகைய நல்ல சுபாவம் அவர்கள் மத்தியிலே காணப்பட்ட போதும், அவர்கள் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து, வேறு சிந்தையை தரித்துக் கொள்ளாதபடிக்கு எச்சரி க்கையுள்ளவர்கயாக இருக்கும்ப டிக்கு அவர்களுக்கு ஆலோசனை யை வழங்கியிருக்கின்றார். முத லாவதாக, தேவ ஊழியராகிய பவு லுக்கு ஏற்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்பட்டால், நாம் அவரைப்போல விசுவாசத்திலே நிலைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, தேவ பிள்ளைகள் கஷ;டங்களை எதிர்நோ க்கும் போது, நாமும், பிலிப்பிய சபையோரைப் போல, அவர்களுடைய தேவைகளிலே உதவி செய்கி ன்றவர்களாக காணப்பட வேண்டும். அந்நாட்களிலே, தேவ ஊழியரா கிய பவுல், கிறிஸ்துவின் சுவிஷேசத் தினிமித்தம் சிறைக் கைதியாக ரோமாபுரியிலே இருந்ததால், உடன் சகோதரரில் அநேகர், சிறைக் கைதியோடு ஐக்கியமாக இருப்பது அவர்களுக்கு அவமானம் என்று கருதி, அவரைவிட்டு விலகிப்போனார்கள். அதனால், தேவ ஊழியர் மனம் தளர்ந்து போகவில்லை. தன் இலக்கை மறந்து போகவில்ரலை. தன்னை அழைத்த தேவன் இன்னார் என்பதையும், அவரே தன்னை விசாரிக்கின்றவர் என்பதிலே மிகவும் உறுதியாய் இருந்தார். அதாவது, தேவ தயவானது, விசுவாசிகள் வழியாகவோ, அவர் கையிட்டு செய்யும் வேலை வழியாகவோ, அல்லது வேறு வழியாகவோ உண்டாகலாம். ஆனால் செய்கையையும் விருப்பத்தையும் கர்த்தரே உண்டு பண்ணுகின்றார் என்பதை திட்டமாக அறிந்திருந்தார். அவரு டைய இக்கட்டான சூழ்நிலையிலே, பிலிப்பிய சபையோர் அவருக்கு உதவும்படி மனம் மலர்ந்தார்கள். அந்தப்படியே நாமும் உதவி செய் கின்றவர்களாகவும், அதே வேளையிலே, நம்முடைய அழைப்பின் பிரதானமாக நோக்கத்தை மறந்து போகாமல், உலகத்தின் மேன்மைக ளிலே இழுப்புண்டு போகாமல், மேலான இலக்கின்மேல் கண்களை பதியவைத்தவர்களாக, கிறிஸ்துவிலிருந்து சிந்தையோடு, பின்னானவை களை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த அழைப்பின் பந்தையப் பொருளை நோக்கி முன்னேறிச் செல்கின்றவர்களாக காணப்பட வேண்டும்.

ஜெபம்:

என் தேவைகளை சந்திக்கும் தேவனே, என் இக்கட்டான சூழ்நிலையில் நான் உம்மை பற்றிக் கொள்ளவும், மற்றவர்களுடைய குறைவிலே உதவி செய்யவும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 4:32