தியானம் (ஆவணி 08, 2026)
தேவனுக்கேற்ற நினைவுகள்!
ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஒரு காரியத்தை செய்யும் போது, அதனால் உண்டாகக்கூடிய பெரு ந்தோல்வியை சந்திக்க ஆயத்தமாயிரு, ஒருவேளை காரியம் வாய்தால் அது உனக்கு எதிர்பாரத வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும். காரியம் வாய்க்காவிட்டால், நீ எதிர்பார்த்த நட்டம் உனக்கு உண்டாயிருக்கும் என்பது சில மனிதர்களின் கொள்கையாக இருக்கின்றது. இன்னுமொரு சாரார், தோல்வியைப் பற்றி சிந்திக்காதே, வெற்றியை நிச்சயம் என்று ஓடு. ஏனைய காரியங்களை குறித்து கவலையடைவதில் நேரத்தை செலவிடாதே என்ற கொள்கையுடையவர்களாக இருக்கின்றார்கள். இப்ப டியாக, இந்த உலகத்திலே, மனித ர்களில் கொள்கைகள் வேறுபட்டிரு க்கின்றது. அவர்களுடைய இருதய த்தின் நினைவுகளும், அவர்களுடைய வழிகளும் வேறுபட்டிருக்கி ன்றது. ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவனாகிய கர்த்தர் தம் முடைய ஜனங்களை நோக்கி: 'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல் உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல் லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.' என்று கூறினார். கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவரு டைய நினைவுகளை உணருகின்றவர் யார்? தேவனுடைய ஆவியே யன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்ட வைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக இருக்கின்ற அருமையான சகோதர சகோதரிகளே, (1 கொரி 2:16), மனிதர்களுடைய கொள்கைகளுக்கும், அவர்களுடைய வழிகளுக்கும் நீங்க் இடங் கொடாமல், மேலானவைகளை சிந்தியுங்கள். இந்த பூலோகத்திற்கு ரியவைகளையல்ல, பரலோகத்திற்குரிய பண்புகளை சிந்தையாக கொண்டிருங்கள். உங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். மனிதனுக்கு செம்மையாக தோன்றும் வழிகளிலே செல்லாமலும், மாம் சத்தின் இச்சைகள் இருதயத்தில் தங்க இடங்கொடாமல், ஆவி க்குரிய தெய்வீக சுபாவங்களுக்கு அங்கே இடங் கொடுத்து, அவைக ளையே சிந்தியுங்கள், தியானியுங்கள். கர்த்தருடைய ஆவியானவனர் எங் கேயோ அங்கே விடுதலை உண்டு.
ஜெபம்:
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று அறிந்த தேவனே, நான் வீணான உலக சிந்தனைகளை வெறுத்து, எப்பொழுதம் உமது வேதத்தில் பிரியமாயிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு - 15:19