புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2026)

பரலோக சமாதானம்!

சங்கீதம் 73:26

தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.


இக்கட்டும் நெருக்கமும் ஒரு மனிதனை சூழ்ந்து கொள்ளும் போது, நண்பர்கள் உறவினர்கள் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொள்வார்கள். ஆனாலட ஒரு மனிதன் ஆராதுயரத்தில் இருக்கும் போது எப்படி ஆறுதலட அடைய முடியும்? எப்படி அவனுக்கு மனச் சமாதானம் சாத்தியமாகும். மனிதர்கள் தங்கள் மனதில் மறைந்திருக்கும் வேதனைகளோடு, தாங்கள் நன்றாக இருக்கின்றோம் என்று மற்றவர்களு க்கு காண்பிக்ககூடிய இயல்புள்ள வர்கள். சிலர் தங்கள் துக்கங்களை ஆற்ற, சில தவறான பழக்கத்திற் குள் தங்கள் சரீரங்களை பயிற்சி வித்துக் கொள்கின்றார்கள். 42ம் சங் கீதத்தை ஆரம்பிக்கும் போது: மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறு கிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னி டத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்று தன்னுடைய உள்ளான நிலைமையைக் குறித்து பாடிய சங்கீதக்காரன், தொடர்ந்து பாடுகையில், என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு. அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது. ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலை யிலுமிருந்து உம்மை நினைக்கிறேன் என்றார். தேவனுடைய விசுவாசிக்கு ஏற்பட்ட கலக்கமான சூழ்நிலையிலே, அவர் இரண்டு காரிங்களை செய்கின்றார். முதலாவதாக: கர்த்தருடைய இரட்சிப்பினிமித்தம் அவரை துதிக்கின்றார். இரண்டாவதாக: அவர் எங்கிருந்தாலும், தேவனை குறித்த சிந்தையே அவருக்குள் இருந்தது. அப்படியாக இருக்கும் விசுவாசிக்கு உண்டாகும் தெய்வீக சமாதானமானது, கிறிஸ்து இயேசுவுக்குள்: முதலாவதாக இருதயத்தைக் எல்லாக் காவலோடும் காத்துக் கொள்கின்றது. இரண்டாவதாக: ஒரு விசுவாசிக்கு உண்டாயிருக்க வேண்டிய கிறிஸ்துவின் சிந்தையையும் காத்துக் கொள்கின்றது. இந்த மனச் சமாதானத்தை எந்த மனிதனாலும் எந்த மனிதனுக்கும் கொடுக்க முடியாது. இது தேவனாலே மாத்திரம் கூடும். இது பரலோக சமாதானம். ஆதை அவர் தம்முடையவர்களுக்கு அருளுகின்றார்.

ஜெபம்:

என் கன்மலையாகிய கர்த்தாவே, என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்மில் நிலைத்திருக்கும்படி பகற்காலத்திலே உம்முடைய கிருபையும், இராக்காலத்திலே உம்மை துதித்து பாடும் பாட்டு என் வாயிலிருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28