புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2026)

சிறிய ஆரம்பங்கள்...

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த உடல் வலிமையுள்ள மனிதனொருவன் முற்கோபியாக இருந்தான். ஒருநாள், அந்த ஊரிலேயுள்ள அவனுடைய உறவினர்களில் ஒருவன், உடல் வலிமையுள்ள இந்த மனிதனுக்கு எதிராக ஒரு காரியத்தை செய்து விட்டான். மூர்க்கத்தோடு, அவனுடைய வீட்டிற்கு விரைந்து செல்ல ஆயத்தப்பட்டபோது, அவனுடைய நண் பனானவன், அவனை தடுத்து, நண்பா, பொழுதுபட்டு விட்டது. இன்றிரவு வேண் டாம், விடியும்வரை காத்திரு. காலை யிலே பிரச்சனையை தீர்ப்பதற்கு நானும் உன்னோடு வருகின்றேன் என்று கூறினான். அவன் கோபத்தை அடக்க முடி யவில்லை. ஆனாலும், அவனுடைய நண்பன் அவனை எப்படியோ நிறுதிவி ட்டான். காலையிலே எழுந்த போது, அவன் கோபம் தணிந்துவிட்டது. தன் உறவினனை தாக்க வேண்டும். அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனைவிட்டு நீங்கிவிட்டது. தான் அந்த இடத்திற்கு போயிருந்தால், பெரிதான விபரீதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று உணர்ந்து, தன் நண்ப னுக்கு நன்றி செலுத்தினான். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, களவு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அதை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று கூறிக் கொள்வது சரியாகுமா? அதுபோலே, கோபம், சண்டை, மோக பாவ எண்ண ங்கள் போன்ற மாம்ச இச்சைகளைக்கு உடனே இடம் கொடுத்துவிடுவீர்ககளா? இவைகளை தடுத்து நிறுத்தும் வழிகளை தேடுவீர்கள் அல்லவோ? கொலை பாதகத்தின் நிமித்தம் சிறைக்கு சென்ற ஒரு மனிதானாவன், 'இரண்டு நிமிடங்கள் என் கோபத்தை அடக்க முடியாததினாலே இந்த பாதக செயலை செய்துவிட்டேன்' என்று கூறி மனம் கசந்து அழுதான். இது உண்மையான கூற்று. ஆனால், அந்த மனிதனானவன், தன் வாலிப வயதிலிருந்து, தன் கோபத்தை அடக்க முயற்சி செய்யாமல், கிடைக்கும் சந்தர்பங்களிளெல்லாம், தன்னை எதிர்கின்ற வர்களை அடித்து பழகிவிட்டான். பிரியமானவர்களே, மனம் மறுரூப மாவதற்குரிய வழிகள் யாவற்றையும் தேவன் செய்து கொடுத்திருக்கின்றார். அதை உங்கள் வாழ்விலே சிறிதாக ஆரம்பியுங்கள். மனதில் தோன்றும் இச்சைகள் நிறைவேறுவதற்கு இடம் கொடுக்காதிருங்கள். சத்திய வழியிலே வழிநடத்தும் ஆவியானவர் உங்களோடு இருக்கின்றார். எனவே, ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு இடங் கொடுங்கள். அவர் உங்களை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரிசுத்த ஆவியயை எனக்கு தந்த தேவனே, நான் ஒவ்வொரு நாளும் மறுரூபம் அடைந்து உம்முடைய சாயலிலே வளரும்படிக்கு என்னை உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:24