தியானம் (ஆடி 25, 2026)
தெய்வீக சுபாவங்கள் வளர வேண்டும்
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன் னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
சில மனிதர்கள் இயற்கையாகவே உடல் வலிமையுடையவர்கள், வேறு சிலர், தங்கள் உடல் வலிமையை மேம்படுத்த சத்துள்ள உணவு வகை களை உட்கொண்டு, ஒழுங்காக உடற்பயிற்சிகளை எடுத்துக் கொள் வார்கள். பிறப்பிலே இசை ஞானத்தை உடையவர்கள் இருக்கின்றார் கள். சிலர் இசை ஞானத்தை பயிற்சியினால் பெற்றுக் கொள்கின்றா ர்கள். இவைகளுக்கு விசுவாசி கள் விதிவிலக்கானவர்கள் அல்ல. உடல் களைப்படையும் போது, மனிதர்கள் இளைப்பாறுகின்றார் கள். இது எங்களுக்குரியதல்ல என்று விசுவாசிகள் கூற முடி யுமா? இல்லை. உடல் களைப் போடு வேலைகளை செய்யும் போது, மனிதர்களுக்கு சீக்கிர மாக சினம் உண்டாகிவிடுகி ன்றது. வழமையான நேர்த்தி யான செய்யும் வேலைகளிலே இலகுவாக தவறுகளும், குறைகளும் உண்டாகிவிடுகி ன்றது. காரியங்களை நிதானித்து அறிய முடியாமல் மூளை களைத்தி ருக்கும் போது, மனிதர்கள் இடைவேளைகளையும் எடுத்து, இளைப் பாறிக் கொள்கின்றார்கள். இவைகள் மனிதர்களுக்கு உண்டாகியிருக்கும் இயற்கை நியதிகள். தேவன்தாமே இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை தம்முடையவர்கள் மத்தியிலே நடப்பிக்க வல்லமையுள்ளவராக இருக்கின்றார். அப்படியாக தேவை ஏற்படும் போது நடத்தி வருகின்றார். ஆனால், பொதுவாக, விசுவாசிகளாகிய நாமும், வாழ்க்கையின் அடிப்படை பிரமாணங்களுக்கு உட்பட்டிருக் கின்றோம். ஒரு விசுவாசியானவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ் துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, ஞானஸ்நானம் பெற்ற நாளிலே, முற்றிலும் தேறினவனாகி விடுகின்றானா? அல்லது அப்படி ஒரே நாளிலே தேற வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் எதி ர்பார்கின்றாரா? இல்லை. உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக் கப்படுகின்றது. தேவவசனத்தை பின்பற்றுகின்றவர்கள் தங்கள் மாம்ச சுபாவங்களிலிருந்து விடுதலையடைகின்றார்;கள். மனம் புதிதாகிறதி னாலே மறுரூபம் அடைகின்றார்கள். அவ்வண்ணமாகவே, கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும், சாந்தகுணமானது விசுவாசிகளிலே உரு வாக வேண்டும். கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு குறி த்த நேரமும், பேச்சு முறைமையும் உண்டு. இவைகளிலே விசுவா சிகள் நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும்.
ஜெபம்:
நன்மையான ஈவுகளை உம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் தேவனே, நான் காரியங்களை நிதானித்து அறியும்படிக்கு, தூய ஆவியின் வழிடத்துதலை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:11