தியானம் (ஆடி 18, 2026)
வேத வார்த்தைகளின் நோக்கம்
மத்தேயு 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
வேதவார்த்தைகள் விசுவாசிகளை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகின்றது. அதுவே வேத வார்த்தைகளின் பிரதானமான நோக்கமாகும். எனவே, அயலவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கும்படிக்கு காரணக்களை தேடும்படி வேத வார்த்தைகளை கற்றுக் கொள்ளாமல், அயலவர்களுக்கு தேவ சித்தத்தின்படி உதவி செய்தெப்படி என்பதை அறிந்து கொள்ளும்படி வேதத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதனால், உலகமும் முழுவதும் என்னுடைய தோளில்மேல் தான் தங்கியிருக்கி ன்றது. உலகத்திலுள்ள எல்லா வறியவர்களுக்கு உதவி செய்வது என்னுடைய பொறுப்பு. உலகம் முழுவதும் நற்செய்தியை பிரசங்கிப்பது என்னுடைய கையில் தான் இருக்கின்றது என்று சிலர் எண்ணிக் கொண்டு, தங்கள் இருதயத்திலே குழப்பமடைந்து கொண்டிருப்பது போல, நீங்கள் குழப்பமடையாமல், உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரதானமான அழைப்பு பரலோகத்திலே நித்திய ஜீவனை அடைவது. அந்த பிரதா னமான நோக்கத்திற்குள், இந்த பூமியிலே நாம் வாழும்வரை நடத்தி முடிக்க வேண்டிய கிரியைகள் உண்டு. அவைகளை நம்முடைய விரு ம்பத்தின்படியல்ல, மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளும்படி அல்ல, தேவ சித்தத்தின்படி, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்படி நற்கிரியை களை நாம் நடப்பிக்க வேண்டும். உலகத்திலுள்ள ஆத்துமாக்கள் முழுவதையும் இரட்சிக்க முயற்சி செய்வதற்கு முன்னதாக, அவரவர் தங்களுடையதை கெட்டுப்போகாமல் காத்துக் கொள்ள வேண்டும். 'மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?' என்று நம்முடைய ஆண் டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, கர்த்தருக்குள் ஒரே சிந்தையை இருப்பதை குறித்து தியானித்து வரு கின்றோம். அந்த சிந்தையானது கிறிஸ்துவின் சிந்தை. ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக காணப்பட வேண்டும். பரலோகத்திலிருந்து நம்முடைய இரட்சகராயிருக்கின்ற ஆண்டவராகிய இயேசு வெளிப்பட ஆயத்தத்தோடு காத்திருப்பவ ர்களாக காணப்படுவோமாக.
ஜெபம்:
அன்பின் தேவனே, என்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், எனக்கு நீர் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 4:6