புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2026)

மனந்திரும்பும் இருதயம்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஒரு பாடசாலையிலே கல்வி கற்று வந்த இரண்டு மாணவர்கள், ஆரம்ப நாட்களிலிருந்து நண்பர்களாக இருந்தார்கள். கல்வி, விiயாட்டுதுறை, மற்றும் இதர நிகழ்ச்சிகளில் இவர்கள் சிறந்து விளங்கினார். ஆதனால், அந்த பாடசாலையிலுள்ள அநேகருக்கு அவர்கள் அறிமுகமானவர்களாக இருந்து வந்தார்கள். வாலிப நாட்களிலே, ஒரு குறிப்பிட்ட பரீ ட்சை நடக்கும்போது, அவர்கள் நெறிமுறையற்ற வகையிலே பரீட் சையை எழுத முயற்சி செய்த போது, கையும் களவுமாக அகப் பட்டுவிட்டார்கள். பாடசாலையின் அதிபர் அவர்களை அழைத்து அவ ர்களோடு பேசிய போது, ஒருவன் தன்னுடைய தவறான நடத்தையைக் குறித்து மனம்வருந்தி, துக்கம டைந்தான். ஆனால், மற்றவனோ, தான் செய்த தவறை பெரிது படுத் தாமல், தன் நிலைமையை எப்படியாவது நியாயப்படுத்த முயன்றான். தன்னுடைய குற்றத்தை மறக்க வேறு யாரையெல்லாம் அதற்குள் இழுத்துக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தான். நீங்கள் அந்த அதிபரின் நிலையில் இருந்தால் இந்த மாணவர்களைக்; குறித்த உங்கள் மனநிலை எப்படியாக இருக்கும்? ஒருவேளை, அந்த மாணவன் இளவயதையுடையவன், அவன் காலத்திலே உணர்வடைவான் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் மத்தியி லும், தங்கள் குற்றங்களை மறைத்து, தங்கள் வழிகளை நியாயப்படுத்துகின்றவர்களை நீங்கள் கண்டிருப் பீர்கள். ஒருவனும் கெட்டுப்போகாமல் மனந்திரும்ப வேண்டும் என் தேவனாகிய கர்த்தர் பொறுமையுள்ளவராக இருக்கின்றார். சில வேளைகளிலே, சபை ஐக்கியங்களிலும் மற்றய விசுவாசிகளும் பொறுமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், ஒருவன் தன் குற்றங்களை மறைத்து, நியாயப்படுத்துகின்றவனாக இருந்தால், அவனுடைய முடிவானது, கர்த்தரோடு சிலுவையில் இடப்பக் கமாக இருந்த கள்வனுக்கு ஒத்ததாக இருக்கும். பிரியமானவர்களே, பெலீனர்களை நாம் தாங்க வேண்டும். பெலனற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், சிலருக்கு நீங்கள் செய்யும் ஆலோசனையாது பன்றிகளுக்கு முன்பாக எறியும் முத்தைப் போல இருக்கும். அது உங்கள் ஆலோசனையும் அசட்டை பண்ணி, திரும்பி, உங்களையும் தாக்கி காயப்படுத்திபோடும் என்று பிலிப்பியர் 2ம் அதிகாரத்திலே தியானித்தோம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனே, ஆவிக்கு ரியவன் சகலத்தையும் நிதானித்தறிவதுபோல, நானும் பொல்லாத வேலையாட்களுடைய வலைக்குள் அகப்படாதபடிக்கு என்னைக் காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:10