புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2026)

துணிகரமாக வாழ்கின்றவர்கள்

1 கொரிந்தியர் 5:6

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?


சக விசுவாசிகளோடு ஐக்கியமாகவும் ஒரே சிந்தையாகவும் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து நாம் தியானித்து வருகின்றறோம். ஆனால், வேறு விதமாக சிந்திக்கின்ற விசுவாசியைக் குறித்து என்ன செய்வது? கொரிந்து சபையிலே உள்ள விசுவாசிகளுக்கு தேவ ஊழிய க்காரனாகிய பவுல் எழுதும் போது, உங்களுக்குள்ளே வெளிப்ப டையாக மோக பாவம் செய்கி ன்றவர்கள் உண்டென்று பிரசித் தமாய்ச் சொல்லப்படுகிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். ஆம் இத்தகைய செயலை இன்றைய நாட்களிலும் அன்பு என்று சிலர் சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால், அது பாவத்தைக் குறித்த உணர்வற்ற கடின இருதயமும், இறுமாப்பும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. மேலும் அவர் கூறுகையில், 'நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? விபசாரக் காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக் காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக் காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. அப் படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்க ளைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிற வர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள் என்று கூறியிருக்கின்றார். ஒருவன் பாவம் செய்தால் அவன், மனம்வருந்தி, மனம்திரும்பி தன் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். ஆனால் அவன் பாவத்திலே துணிகரமாக வாழும்படி தீர்மானித்திருந்தால், அவனைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னுடைய மனதின் உணர்வுகளின்படியல்ல, உம்முடைய வார்த்தையின்படி அன்புள்ளவனாக இருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:7-9