புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2026)

தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்

1 தெச 5:6

ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய பக்தர்களுக்கு, அவருடைய வருகை மிகப் பெரும் மகிழ்ச்சி, ஆனால் அவர் வருகையை எதிர்பாராத மாந்த ர்க்கு அந்த நாள் கெடித்தும் பயங்கரமுமான நாளுமாயிருக்கும் என்று பொருட்படும்படி ஒரு பாடலின் வரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேற்குறிப்பிட்ட வரிகளை மறும்படியும் வாசித்து, சற்று தரித்திருந்து தியானியுங்கள். கடந்த இரண்டு கிழ மைகளாக, நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கின்றது என்பதைக் குறித்து தியானித்து வந்தோம். அதை வாய்ப்பேச்சுடன் நிறு த்திவிடாமல், அதன்படிக்கு நம்முடைய வாழ்க்கையானது அந்தப் பேச்சுக்கு ஒத்திருக்க வேண்டும். ஆயத்தமற்றவர்கள் கைவிடப்படுவதைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, தெளிவாக உரைத்திருப்பதை நாம் மத்தேயு எழுதின சுவிசேஷத்திலிருந்து பார்த் தோம். எனவே, உங்களுடைய இருதயம் உணர்வற்றுப் போகாதபடிக்கு எல்லாக் காவலோடும் அதைக் காத்துக் கொள்ளுங்கள். 'ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.' என்று யூதா எழுதின நிரூபத்திலே வாசிக்கின்றோம். நித்திய கன மகிமைக்கென்று அழைக்கப்பட்ட அருமையான விசுவாசிகளே, சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்கு கிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்க ளாயி ருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

ஜெபம்:

நித்திய குடியிருப்புக்கு என்னை அழைத்த தேவனே, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாக காணப்படும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 22:7