புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2026)

பெரிதான அழைப்பு

எபேசியர் 4:1

நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,


ஒரு பிள்ளையானவன், விபரமரியும் காலத்திற்கு முன்னே, அவனைப் பார்த்த முதியவரொருவர் அவனுடைய போக்குகள் சரியானதல்ல. சில காரியங்கள் இப்பொழுதே மாற்றப்பட வேண்டும் என்று அவனுடைய பெற்றோருக்கு அறிவுரரை கூறினார். அது அவனுடைய சின்ன வயதல்லவோ? அவன் செய்வது பாதகமற்ற அற்பமான காரியங்கள் அல்லவோ? உண்மை! ஆனால், பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று நீதிமொ ழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். உன்னதமான அழைப்பை பெற்ற தேவ பிள்ளைகளே, அவருடைய அழைப்பை குறித்து, அசதியாய் இருந்து விடாதிருங்கள். சின்னக் காரியத்தானே என்று, சாட்டுப் போக்குகளை விதைக்காதிருங்கள். அவை காலப்போலக்கிலே பெரிய விருட்சமாக மாறிவிடும். ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முன்னுரிமைப்படி அழைப்பை பெற்றவர்களைக் குறித்து கூறும் போது: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல் லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக் கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொரு வன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப்பார்க்கப் போகி றேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். பெருவ ழிகளிலும் வேலிகளருகிலும் இருந்தவர்கள் விருந்தை ருசிபார்த்தார்கள். அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்றார். எனவே, சாட்டுபோக்குகள் சொல்வதை விட்டுவிட்டு, தேவனுடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து அத ற்கு பாத்திரராக நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக மேன்மைக்கென என்னை அழைத்த தேவனே, நித்திய பரம தேசத்திற்கென நான் பெற்ற அழைப்பைக் குறித்து அசதியாக இருக்காமல், உணர்வுள்ள இருயதத்தோடு நான் வாழும்படிக்கு என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசுகிறிஸ்து வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:23