புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2026)

நம்மைக்குறித்த பிரதான சித்தம்!

எபேசியர் 5:17

ஆகையால், நீங்கள் மதிய ற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.


பரம அழைப்பின் பந்தையப் பொருளை நோக்கி செல்லும் பிரியமான சகோதர சகோதரிகளே. நம்முடைய குடியிருப்பு இந்த பூமிக்குரியதல்ல என்பதைக் குறித்து எச்சரிக்கையள்ளவர்களாக இருங்கள். தேவ ஊழியராகிய பவுல் எபேசு சபையோருக்கு எழுதும் போது, தேவ பிள்ளைகளாகிய பரிசுத்தவான்களுக்கு எச்சரிப்பை கூறியிருக்கின்றார், எபேசியர் 5ம் அதிகாரத்திலே அவர் கூறும்போது: மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முத லாய் உங்களுக்குள்ளே சொல்லப்ப டவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ் செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக் காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர் களே என்றார். இந்த எச்சரிப்பை குறித்து அஜாக்கிரதையாக இருப்பவர்களின் நிலைமை என்ன? 1. இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும், 2. ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட செய்கைளை ஆதரித்து, தேவன் அன்புள்ளவர் என்று அவருடைய பரிசுத்தத்தை அசட்டை செய்கின்றவர்களுடன பங்காளிகளாகாதிருங்கள் என்று கூறியிருக்கின்றார். எனவே விசுவாசிகளாகிய நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர் கூறுகையில்: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமா யிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விள ங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். மேலே கூறப்பட்ட எச்சரிப்புக்களை குறித்து தியானியுங்கள். இலக்கை நோக்கி முன்னேற தடையானவைகளை விட்டுவிட்டு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வெளி ப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருங்கள்.

ஜெபம்:

பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு காத்துக் கொள்ளும்படிக்கு உம்முடைய வார்த்தையின் வழியிலே வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:20