தியானம் (ஆனி 20, 2026)
எச்சரிப்புக்களை தள்ளிப்போடாதிருங்கள்
மத்தேயு 10:16
ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாச குடும்பத்தினர் தேவனுடைய வார்த்தையிலே உறுதியாய் கட்டப்பட்டிருந்தார்கள். சபையிலே நடக்கும் ஞாயிறு ஆராதனைகள், உபவாச கூட்டங்கள், ஜெப கூட்டங்கள், விசேஷ ஆராதனைகள் போன்றவற்றில் தவறாமல் கலந்து கொண்டா ர்கள். அவர்கள் பிள்ளைகளும் அப்டியே ஓய்வு நாள் படாசாலை நிகழ்ச்சிகள், வாலிப கூட்டங்களிலே பங்கு பற்றி வந்தார்கள். வேறு அலுவல்களில் பங்கு பெறுவதற்கு அவர் களுக்கு நேரமில்லாதிருந்தது. அதனால், அநேக பிரச்சனைகளை தாங்கள் தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராதிருந்தார்கள். பிள் ளைகள் வளர்ந்து திருமண வயதிற்கு வந்தபோது, அந்த ஊரிலுள்ள அநே கர் திருமணத்திற்காகவும் வேலைக்காகவும் வெளிநாட்டிற்கு செல்கின்றார்கள் என்பதை கண்டு கொண்டார்கள். அந்த இடத்திலே அந்தக் குடும்பத்தினருக்கு உண்மையானதும் அவசியமானதுமாக தேவை இருந்தது, ஒரு நாள், அவர்கள் சென்று வந்த சபைக்கு ஒரு மனிதன் வருகை தந்திருந்தான். அவன் தன்னை மிகவும் பக்கியுள்ளவன் போல காண்பித்து, வெளிநாட்டிற்கு தான் மனிதர்களை அனுப்புவதாகவும், விசேஷமாக விசுவாச குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறியிருந்தான். சபையின் போதகர், இந்த காரியத்தைக் குறித்து எச்சரிப்பு வழங்கியிருந்தார். அப்டியிருந்தும், அந்தக் குடும்பத்தினர், அந்த மனிதனோடு பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு தேவையொ ன்று இருப்பதை அறிந்த அந்த மனிதனானவன், அவர்களோடு மிகவும் தயவாய் பேசி, மிகவும் குறைந்த பணத்திலே அவர்களுடைய பிள் ளையை வெளிநாட்டிற்கு அனுபதாக வாக்குரைது, குறித்த நாள் வந்த போது, அநேகரிடம் முற்பணத்தை வாங்கி தன்வழியே போய்விட்டான். நாட்கள் கடந்து சென்றதும், அந்த விசுவாச குடும்பத்தினர் தாங்கள் வஞ்சிக்கப்பட்டு போய்விட்மோம் என்று அறிந்து கொண்டார்கள். பிரியமானவர்களே, வஞ்சிக்கின்றவர்கள், உங்களோடு தொடர்புகொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தேடி பொறுமாயாக இருப்பார்கள். எனவே, கர்த்தரின் நாமத்தில் வருகின்றோம் என்று ஊடகங்கள் வழியாக வரும் செய்திகளுக்கு செவி சாய்காதிருங்கள். உங்கள் மத்தியிலே, பொரு ளாசையில்லாதவர்களாக இருந்து, உங்களை கருத்தோடு விசாரித்து, உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றவர்களை மதித்து, அவர்கள் புத்தி மதியைக் கேளுங்கள்.
ஜெபம்:
எனக்கு ஆலோசனை தரும் கர்த்தாவே, என்னை விசாரித்து, உண்மையாய் எனக்கு ஆலோசனை கூறுகின்றவர்களை மதித்து, எச்சரிப்பின் சத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இருதயத்தை எனக்கு தந்து வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 24:5