புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2026)

உண்மையுள்ள ஊழியர்கள்

1 தெச 2:10

விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.


உத்தம இருயத்தோடு, போதிக்கின்றவர்கள், மனிதர்களை பிரியப்படத்த போதிக்காமல், தேவனுடைய சத்திய வார்த்தைகளை கலப்பில்லாமல் போதிக்கின்றார்கள். அந்த சத்திய வார்த்தைகளை பின்பற்றுகின்றவர்கள் இடறிப் போதில்லை. சத்தியத்தின்படி நடக்கும் போதகர்களுடைய சில தன்மைகளை தேவ ஊழியராகிய பவுல், தெசலோனிக்கேய சபை யோருக்கு விளக்கி கூறியிருக்கின்றார். 'சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத் திலே நாங்கள் பாடுபட்டு நிந்தைய டைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷ த்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம். எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையி னாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம் பண்ணவுமில்லை; தேவனே சாட்சி. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. உங்களிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப் பாற்றுகிறது போல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவ னுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலை செய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.' எனவே உண்மையுள்ளவர்கள் யார் என்பதை நீங்கள் நிதானித்து அறியுங்கள்.

ஜெபம்:

உம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் என்னை அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடந்து, சத்தியத்தை பற்றிக் கொண்டு, பாத்திரனாய் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:24

Category Tags: