தியானம் (ஆனி 17, 2026)
'கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்'
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர் எப்படி இயேசு கிறிஸ்துவினால் உண்டான ஜீவனுள்ள வழியை காண்பிக்க முடியும்? இவர்கள், விசுவாசிகளை கிறிஸ்துவின் உண்மையிலிருந்து விலகச் செய்யும்படி, அதவாது, ஆதி அப்போஸ்தலர்கள் பிரசங்கியாத வேறுறொரு இயேசுவையும், வேறொரு ஆவியையும், வேறுறொரு சுவிசேஷத்தையும் பிரசங்கிக்கின் றார்கள். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் இரட்சகர் இல்லை. வேறொரு வழியை காண்பிப்பவன் அந் திக் கிறிஸ்து. அந்த ஆவி வஞ்சிக்கின்ற ஆவி. இப்படி யப்பட்டவர்கள் கூறியும் சுவி சேஷம் அல்ல சுவிசேஷம் அல்ல. வஞ்சிக்கின்றவர்க ளைக் குறித்து ஆண்டவரா கிய இயேசு கூறும் போது, 'ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர் கள் சிலர். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளி னாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடு க்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.' என்றார். எனவே, வஞ்சிக்கின்றவர்களை அவர்கள் வாழ்வின் கனிக ளாலே அவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்ளலாம். அவர்களுடைய தேவன் அவர்களுடைய வயிறாக இருப்பதால், அவர்களுடைய கண் கள் இந்த உலகத்தின் ஐசுவரியத்தையும் ஆஸ்திகளையும் குறித்ததாக இருக்கும். அவர்கள், கிறஸ்து இயேசுவை அறியாததினால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்திலில் வீற்றிருக்ககும் மேலானவைகளை தேடுவதில்லை. மேலானவைகளைவிட அவர் பூமிக்ககுரியவைகளை குறித்து அதிகமாக பேசி அவைகளிலேயே நாட்டமாயிருப்பார்கள். அவர் முதலாவது தங்கள் தேவைகளை நாடித் தேடுகின்றார்கள. நீங்களோ அப்படியிரால், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள். மிகு தியானவைகளை தேவன் பார்த்துக் கொள்வார்.
ஜெபம்:
நித்திய ராஜ்யத்திற்காக என்னை வேறு பிரித்த தேவனே, வஞ்சிக்கின்ற ஆவிகளை நான் நிதானித்தறியும்படி எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து உம்முடைய வார்த்தையின் வழியிலே நமத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலி 3:19