தியானம் (ஆனி 14, 2026)
உணர்வுள்ள ஜீவியம்
வெளிப்படுத்தல் 3:15
நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
என்னுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றவர்கள் யார்? என் சுயம் விரும்பும் காரியங்களுக்கு தடையில்லாமல் அதை ஆதரிக்கின்றவர்கள் யார்? நான் விரும்புவைகளை செய்தாலும் என்னை கிறிஸ்தவன் என்று அழைக்கின்றவர்கள் யார்? அப்படிபட்ட ஐக்கியத்திலேயே நான் இருக்க விரும்புகின்றேன் என்ற பிரகாரமாக வாழ்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதாவது, இந்த உலகத்தி ற்கு ஒத்த வேஷத்தை தரிக்க வேண் டும். இந்த உலகம் தரும் மேன்மை களை உலகத்தார் போல் அனுபவிக்க வேண்டும். ஆனால், என்னை கிறிஸ்தவனாக கருதிக் கொள்ளவேண்டும் என்பதே இவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது. உலகத்தாரை போல வாழ்ந்து கொண்டு, கிறிஸ்துவை பின்பற்றுகின்றேன் என்று அழைக் கப்பட வேண்டும் என்று ஆசைப் படுகின்றார்கள். இதை வாசிக்கின்ற நீங்கள் இது ஒரு கற்பனை கதை என்று எண்ணிக் கொள்ளலாம். அப்ப டியல்ல, இப்படியான அநேக உண்மை சம்பவங்கள், ஆரம்பத்திலி ருந்தே நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. பரிசுத்த வேதாகமத்திலே, வெளிப்படுத்தல் புத்தகத்திலே, ஆண்டவராகிய இயேசுதாமே சபைக ளின் நிலைமைகளைக் குறித்து கூறும் போது, செல்வ செழிப்புடன் இருந்த லவோதிக்கேயா சபையோரை நோக்கி: உன் கிரியைகளை அறிந்திருக்கின்றேன். நீ குளிருமல்ல அனலுமல்ல. நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்னி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயி னின்று வாந்திபண்ணிப் போடுவேன் என்று கூறினார். இவர்கள் சபை யிலே இருந்தார்கள். தாங்கள் ஐசுவரியவான்களென்றும், திரவியசம்பன்னனெரென்றும், தங்களுக்கு குறையேதும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆண்டவராகிய இயேசுவோ: அவர்கள் நிர்பாக்கிய முள்ளவர்களும், பரிதபிக்கப்படதக்கவர்களும், தரித்திரர்களும், குருடர்க ளும், நிர்வாணிகளுமாயிருக்கின்றீர்கள் என்று அவர்களுடைய ஆவிக் குரிய பரிதாபமான நிலைமையைக் குறித்து எடுத்துரைத்தார். பிரிய மானவர்களே, நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடத்தில் தான் நாங்கள் இருப்போம் என்று வாழாமல், ஆண்டவராகிய இயேசுவினால் ஏற்றுக் கொள்ளப்படும்படிக்காய், வேத வார்த்தைகளின்படி வாழும்படியான உங் களை ஒப்புக் கொடுங்கள். சுயம் விரும்பும் இடங்களை நாடித் தேடாமல், நீங்கள் உங்களை கிறிஸ்துவின் சாயலிலே மாற்ற இடங்கொடுங்கள்.
ஜெபம்:
தாயின் கருவினிலே என்னை தெரிந்து கொண்ட தேவனே, வேதனை உண்டாக்கும்வழிகள் என்னித்திலிருந்தால், அவைகளை உணர் த்தி, அவைகளில் இருந்து நான் விடுதலையடையும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:24