தியானம் (ஆனி 12, 2026)
பாவத்திற்கு வழிவகுக்கும் நட்புக்கள்...
ரோமர் 6:13
உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தகப்பனானவருக்கு ஐந்து குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன், ஊரிலுள்ள வீணர்கள் சிலரோடு நட்புள்ளவனாக இருந்தான். அவ்வப்போது, அவர்களோடு சேர்ந்து, தன் தகப்பனுடைய சொல்லை மீறி நடக்கின்றவனாக இருந்தான். ஒவ்வொரு முறையும் அவனுடைய தகப்பனானவர் அவனுடைய தவறான செய்கை களைக் குறித்து அவனோடு பேசும் போது, கடந்தவைகளை நான் மற ந்து விட்டேன், இனி அப்படி நடக் காதபடிக்கு பார்த்துக் கொள்கின் றேன் என்று கூறிக் கொள்வான். இந்த பேச்சு அவனுடைய வழக்க மாயிற்று. அதவாது, தான் நடத்தி முடித்து தவறுகளை நோக்காமல், எதிர்காலத்தை நோக்கி முன்னேறு கின்றேன் என்று கூறிக் கொள்வான். ஆனால், தவறுகளை நடப்பிக்க உந்துதலாக இருக்கும் நட்புகளை விட்டுவிட அவனுக்கு மனதில்லை. நித்திய வாழ்விகென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாத துமாகிய சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்ப டியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். எனவே, நாம் பின்னான வைகளை மறந்து முன்னானவைகளை நாடி பந்தயப்பொருளை பற்றிக் கொள்ளும்படி முன்னோக்கி செல்கின்றோம். பின்னானவைகளை மற ப்பது என்பது, கடந்த நாட்களிலே செய்த பாவங்களை குறித்து பேசா திருப்பது என்பது பொருளல்ல. அவைகளை விட்டுவிடுவதுடன், அவை களை உண்டாக்கும் காரணிகளையும் விட்டு விட வேண்டும். மேலே குறிப்பிட்ட சம்பவத்திலே, அவன், நேற்றைய குற்றங்களை பேசாதிரு ந்தான். ஆனால், அந்த குற்றங்களுக்கு தன்னை உந்தும் வீணரான நண்பர்களின் நட்பை விட்டுவிட மனதில்லாதவனா யிருந்தான். சில சமயங்களிலே, சில விசுவாசிகளும் கூட அப்படியாக இருந்து விடுகி ன்றார்கள். அப்படியான மனநிலையோடு இருக்கின்ற வர்கள் தங்க ளுக்கு தாங்களே நோவுகளை உண்டாக்கி கொள்கின்ற hர்கள். காலப் போக்கிலே, அவர்களுடைய சுத்த மனசாட்சியானது சூடுண்டு போவ தால், தாங்கள் செய்வதின் பின்விளைவுகளை பற்றிய உணர்வற்றவ ர்களாக மாறிவிடுகின்றார்கள். எனவே, பாவங்களுக்கு வழிநடத்தும் நட்புக்களையும் உறவுகளையும் குறித்து எச்சரிக்கையுள்ளவர்ளாக இருங்கள்.
ஜெபம்:
ஈடு இணையில்லாத மகிமைக்காக என்னை அழைத்த தேவனே, இந்த மகத்துவமுள்ள அழைப்புக்கு தடையாயிருப்பவைகளை கண்டு உணர்ந்து விட்டுவிடும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6