தியானம் (ஆனி 10, 2026)
கிறிஸ்துவுக்குள் வேறுபிரிந்த வாழ்க்கை
2 கொரிந்தியர் 6:15
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
அக்காலத்திலே, தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேற்றி முடிக்கும்படி, தமக்கென்று ஒரு ஜனக்கூட்ட த்தை பிரித்தெடுத்தார். அவர்களுக்கு ஆராதனை முறைமையகளையும், இரட்சிப்பையும், வேறு பிரிந்த வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்தார். அவர்களை பின்னிட்டு சோரம்போகம் பண்ணுவார்கள். உங்களை நெரு க்கி, அவர்களுடைய வழிபாடுகள் உங்களுக்கு கண்ணியாக மாறும் என்று முன்னறிவத்திருந்தார். அப்ப டியாக தேவனாகிய கர்த்தர் கூறி யிருந்தும், அவர்கள் அவருடைய வழியை விட்டு விலகி, பெருந்தன் மையோடு, புறஜாதிகளோடு உடன் படிக்கை பண்ணி, தங்கை அழைத்த தேவனாகிய கர்த்தரை விட்வி வில கினாகர்கள். அவரே தங்களுகடைய பெலன், அவர் தங்களோடு இரு ப்பதே மேன்மை என்பதை மறந்து போனார்கள். மற்றவர்களைப்போல தங்கள் மாம்சத்திலே நம்பிக்கை வைத்தார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையிலே பெரிதான துன்பங் களையும் இழப்புக்களையும்; சந்தித்து, அடிமைத்தனத்திற்குள்ளா னார் கள். இவைகள் வரவிருக்கும் மேன்மையயான காரியங்களுக்கு நிழ லாய் இருந்தது. இன்றைய நாட்களிலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ் துவினால் மீட்பை பெற்றவர்கள், வேறு பிரிந்த வாழ்க்கைக்கு என்று அழைக்கப்பட்டிக்கின்றார்கள். கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாக இவர்களுக்குள் இருக்கின்றார். கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையுமே இவர்களுடைய பெலன். இப்படியாக ஆரம்பித்தவர்கள், பாதி வழியிலே, வாழ்க்கையிலே சௌகரியம் ஏற்படும் போது, மனத்திலே பெருந்தன்மையுடையவர்க ளாக மாறி, கிறிஸ்துவை அறியாதவர்களுடைய ஐக்கியமாக இருப் பதை நாடுகின்றார்கள். அந்தார இருளில் இருந்து ஆச்சரியமான ஒளிக்கு அழைக்கப்பட்ட இவர்கள், மறுபடியும் இருளின் அதிகாரத்திற்குள் வாழ்பவர்களுடைய நட்பை ஏற்படுத்தி, அவர்களோடு போக்கும் வரத் துமாக இருக்கின்றார்கள். இது தங்கள் பெருந்தன்மை, கிறிஸ்துவினால் உண்டான முதிர்ச்சி, முற்றிலும் தேறின நிலை என்று எண்ணிக் கொள்கி ன்றார்கள். அப்படியல்ல, இவைகளை ஒரே வார்த்தையில் சுருக்கமாக கூற முடியும். 'சமரசம்'. பிரியமானவர்களே, உங்கள் அழைப்பின் மேன்மை மறந்து, இந்த உலக போக்கினால் வஞ்சிக்கப்பட்டு போகாத படிக்கு எச்சரிக்கiயுள்ள வர்களாக இருங்கள்.
ஜெபம்:
வேறு பிரிந்த வாழ்க்கைக்கென்று என்னை அழைத்த தேவனே, இலக்கை நோக்கி ஓடுகின்றதை சிந்தையான கொண்டிருக்கவும், வேறு சிந்தையாக மாறாதபடிக்கும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 14:6