புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2026)

கிறிஸ்துவானவரே மகிமையின் நம்பிக்கை

பிலிப்பியர் 3:9

கிறிஸ்துவுக்குள் இருக்கிற வனென்று காணப்படும்படி க்கும்,


'இவரைப் பார்த்தால் ஒரு மேய்பருக்குரிய தோற்றம் இல்லை. அவருடைய குரல் வளம், பேசும் பாணி, போதகருக்கு ஏற்புடையதாக இல்லை' என்று சில விசுவாசிகள் தேவனுடைய ஊழியக்காரரைக் குறித்து பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஒரு தேவனுடைய ஊழியக்காரனுடைய குரல் வளம் நன்றாகவும், அவருடைய பேசும் பாணியானது கவர்சியாவும் இருந்தால் நல்லது. ஆனால், அவைகளினால் மேன்மை உண்டாவதில்லை. சிலர் வெளி தோற்றங்களை வைத்து, போதகர்களையும், மேய்பர்களையும் இடைபோட்டு விடுகின்றார்கள். இன்றுமட்டுமல்ல, அன்றும் அப்படியானவர்கள் சபைக ளிலே இருந்தார்கள். தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுல், கொரிந்து சபைக்கு எழுதும் போது, வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? என்று கேட்டார். ஏனெனில், அவருடைய வெளிதோற்றமானது விரும் பப்படதக்கதாக இருக்கவில்லை. அவரைக்குறித்து சிலர் கூறும் போது, அவனுடைய நிருபங்கள் ஆழமானதும், பலமுமுள்ளவைகளாக இருக் கின்றது. சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், பேசும் விதமானது நகைப்புக்குரியது என்று கூறினார்கள். இவரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே, தம்முடைய விசேஷித்த ஊழியத்திற்கென்று பிரித்தெடு த்தார். வெளித்தோற்றங்களைப் பார்த்து, காரியங்களை நடப்பிக்கின்ற வர்களைக் குறித்து தேவனுடைய ஊழிக்காரனாகிய பவுல் எழுதும் போது: 'ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக் கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.' என்று கூறியிருக்கின்றார். பாவமன்னிப்பும், இரட்சிப்பும், கிரிகைகளினாலும், வெளி தோற்றத்திலும் உண்டாவதில்லை. மாறாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தினாலே உண்டாகின்றது. கிறிஸ்து அறிவதும், கிறிஸ்துவை மகிமையின் நம்பிக்கையாக கொண்டிருப்பதும், கிறி ஸ்துவிலிருந்த சிந்தையை கொண்டிருப்பதுமே ஒரு விசுவாசிவாசியின் மேன்மையாக இருக்கின்றது. எனவே, 'நான் கிறிஸ்துவை ஆதாய ப்படுத்திக்கொள்ளும்படிக்கும், சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படுவதையே நாடுகின் றேன் என்று திட்டமாக கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருப்பதே அந்த இரகசியம் என்பதை தெரியப்படுத்த சித்தம் கொண்ட தேவனே, அந்த நம்பிக்கையிலே நான் அசையாமல் உறுதியாய் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 1:27