புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2026)

ஆவிக்குரிய போராட்டம்

2 கொரிந்தியர் 10:3

...மாம்சத்தின்படி போர்செய் கிறவர்களல்ல.


தேவ ஊழியராகிய பேதுரு, தன்னுடைய 2ம் நிரூபத்தின் கடைசி அதிகாரத்திலே, வேதத்தை புரட்டுகின்ற பொல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், கள்ளப் போதகர்களைக் குறித்து விசுவாசிகள் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எச்சரிப்பை வழங்கியிருக்கின்றார். கடைசி காலத்திலே வாழ்ந்து வருகின்ற நாம், கர்த்தர் வரக் காத்திருக்கின்றோம். வேத வார்த்தைகளை அறிந் திருக்க வேண்டிய பிரகாரமாக அறி யாதவர்களுமு;, மன உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 'ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங் கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையா யிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.' என்று தன்னுடைய நிரூபத்தின் கடைசி வசனத்திலே கூறியிருக்கின்றார். ஆம், பிரி யமானவர்களே, பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தின் 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே, கபொல்லாத வேலையாட்களுக்கும், பின்மாற்றக் காரரு க்கும், தங்கள் பழைய மதச்சடங்குகளுக்கு திரும்புகின்றர்களுக்கும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதை கடந்த நாட் களிலே தியானித்தோம். இவர்கள் இயேசுகிறிஸ்துவை அறியும் அறிவி லிருந்து விசுவாசிகளை வஞ்சித்து, மாம்சத்தின் எண்ணங்களுக்கு அவர்களை திருப்பிவிடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். மனமேட்டிமைகள் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் செயற்படுகின்றது என்பதை 2 கொரிந்தியர் 10:5 ல் வாசிக்கின்றோம். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. (நீதிமொழிகள் 16:18). எனவே, தேவ ஊழியராகிய பவுல், என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக, மாம்சத்திலே தனக்கு உண்டான உலக மேன்மைகள் எல்லாவற்றையும் நஷ;டமென்று விட்டு விட்டார். எனவே, தேவனுடைய பெலத்தினாலேயே, நாங்கள் தர்க்க ங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறி ஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். பிரிய மானவர்களே, கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவிலே வளருங்கள். அதற்குகு எதிராக செயற்படும் மேட்டிமைகளை விட்டுவிடுங்கள்.

ஜெபம்:

உம்முடைய வார்த்தையை அனுப்பி என்னை விடுதலையா க்கின்ற தேவனே, நீர் முன்குறித்தவைகள் நிறைவேறும்படிக்கு நான் உமக்காக காத்திருக்கும் பெலனை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:1-4