புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2026)

எச்சரிப்பின் சத்தம்!

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல் லுவேன்.


பிலிப்பியருக்கு எழுதிய முதல் இரண்டு அதிகாரங்களிலும், வாழ்த் துக்கள், நிறைவுகள், எச்சரிப்புக்கள், குறைவுகளைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல் எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள், நிறைவுகள் மனதிற்கு இனிமையானவைகள். ஆனால், எச்சரிப்புக்களையும், குறைவு களையும் குறித்து பேசும் போது, விசுவாசிகள் சோர்ந்து போய்விடு கின்றார்கள். குறிப்பாக எச்சரிப்புகள் மனதிலே பயத்தை உண்டு பண் ணிவிடும். ஆதலால், அப்போஸ்த லராகிய பவுல் மட்டுமல்ல, மற்ற அப்போஸ்தலர்களும், என்னதான் நடந்தாலும், கர்த்தருக்குள் சந்தோ ஷமாக இருக்க வேண்டும், கவ லையிலே மூழ்கிப் போய்விடக் கூடாது என்று இடையிடையே கூறி யிருக்கின்றார்கள். மூன்றாம் அதி காரத்தின் ஆரம்பத்திலே கர்த்தரு க்குள் சந்தோஷமாக இருக்கும் படி திரும்பக் கூறிய தேவ ஊழிய ராகிய பவுல், அடுத்த வசனங்களிலே சபையோர் எச்சரிக்கையாக இரு க்க வேண்டிய காரியங்களைக் குறித்து கூறுகின்றார். ஏனெனில், கோண லும் மாறுபாடுமான சந்ததி நடுவிலே, வஞ்சிக்கின்றவர்கள் மத்தியிலே விசுவாசிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சில இடங்களிலே, சபைக்குள்ளும் வஞ்சிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை விசு வாசிகள் மறந்து போய்விடுகின்றார்கள். விசுவாசிகள் சபைக்குள் இருந் தாலும், சபைக்கு வெளியே இருந்தாலும், வேதம் கூறும் ஆலோச னைகளை மறந்து போய்விடக்கூடாது. சிலர் வேதத்திலுள்ள எச்சரிப்பு க்களை மறந்து, தங்கள் உணர்வின்படி கிரியைகளை நடபிக்க முய ற்சிக்கும்போது, சறுக்கி விழுந்து விடுவதால், சபைக்குள் பல பிரச்ச னைகளை ஏற்படுத்திவிடுகின்றார்கள். சபைக்கு வெளியே தேவனுடைய நாமம் தூஷpக்கப்பட இடம் கொடுகின்றார்கள். ஏச்சரிப்புகளைப் பற்றி கூறும் இடங்களிலே, விசுவாசிகள் அன்பை மட்டுமல்ல, அன்போடு பரிசுத்தத்தைக் குறித்து எண்ணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சிலர் ஆலோசனைகளுக்கு எதிர்த்து நின்று, எல்லாருக்கும் அன்பு காட்ட வேண்டும் என்று வஞ்சக வலைக்குள் சிக்கிவிடுகின்றார்கள். எனவே, வேதத்திலே கூறப்படும் எச்சரிப்புக்களை அற்பமாக எண்ணாதிருங்கள். சோர்ந்து போய்விடாதிருங்கள். பயம் உங்கள் இருதயங்களை ஆட்கொள்ள விடாமல், தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு போதித்தி நடத்தி ஆலோசனை தரும் தேவனே, தேவ ஆலோசனைகளை நான் அற்பாக எண்ணாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7