புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2026)

நோக்கம் ஒன்றே!

யோவான் 10:28

நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,


பிதாவாகிய தேவனின் இரட்சிப்பின் வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் சமீபமானபோது, 'அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.'. இவன் கர்த்தருக்கு வழியை ஆயத்த ம்பண்ணும்படியான வந்தான். மேலும், யோவான் ஸ்நானன் கூறுகையில்: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறி யாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்று வாக்களிக்கப்பட்ட மெசியாவாகிய இயேசுவை குறித்து சாட்சி பகர்ந்தான். ஆண்டவராகிய இயேசு யோவான் ஸநானனினால் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, 'அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.'. மேலும் ஆண்டவராகிய இயேசு கூறிய சில வார்த்தைகளை பார்ப்போம்: 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.' 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.' 'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 'மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?' இந்த வார்த்தைகள் யாவும் ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அதவாது, தம்மை விசுவாசிக்கின்றவல்கள் பரலோக ராஜ்யத்திலே, நித் திய ஜீவனை அடைவதே அந்த நோக்கம். விசுவாசிகளுடைய வாழ் க்கையானது அந்த நோக்கமுடையதாகவே காணப்படவேண்டும். இதைத் திரும்ப திரும்ப ஏன் சொல்கின்றீர்கள்? ஏன் ஞாபகப்படுத்த வேண்டும் என்று எந்த விசுவாசியும் சொல்லிக் கொள்ள கூடாது. ஏனெனில் நம்முடைய நோக்கம் ஒன்றே! பரலோக ராஜ்யத்திலே நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, எந்த காரணத்திற்காகவும், அந்த மேன்மையான ஒரே நோக்கத்தை நான் இழந்து விடாதபடிக்கு என்னை உம்முடைய வழியிலே வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:68