தியானம் (வைகாசி 02, 2026)
'அறிந்த பிரசங்கங்கள்'
பிலிப்பியர் 3:1
எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
பெற்றோர், தங்கள் பிள்ளையானவன் பாடசாலைக்கு செல்ல ஆரம்பி க்கும்போது, பாடசாலையிலே எப்படி நடந்து கொள்ள வேண்டும். குறி த்த இடைவேளைகிலே சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும், கொண்டு செல்லும் குளிர்பானங்களை குடி க்க வேண்டும். மதிய உணவை சாப்பிட வேண்டும் என்று தவறா மல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுகின்றார்கள். அவர்கள் வள ர்ந்து வாலிபர்களாக வந்த பின் பும், அவர்கள் கொண்டு சென்ற உணவை சாப்பிட்டார்களா என்று தாயார் விசாரிப்பாள் அல்லவா! சில வேளைகளிலே, பிள்ளையான வனுக்கு அதைக்குறித்து விரும்பம் இல்லாதிருக்கலாம். நான் வளர்ந்து விட்டேன், ஏன் எனக்கு திரும்ப திரும்ப இதை ஞாபகப்படுத்;துகின் றீர்கள் என்று கூறிக் கொள்வான். அப்படியிருந்தும், ஏன் தாயானவள், தன் பிள்ளையை விசாரிக்கின்றார்கள். ஏன் திரும்ப திரும்ப ஒரே காரியத்தை குறித்து கேட்கின்றாள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். அது போலவே, இந்த உலகத்திலே விசுவாசிகளை வஞ்சிக்கும்படி பிசாசா னவன் சுற்றித்திரிகின்றான். ஆதியிலே இருந்து ஒரே விதமான வஞ்சிக் கும் யுக்தியையே அவன் செய்து வருகின்றான். 'அவனுடைய தந்திர ங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.' எனவே, அவைகளிலி ருந்து தப்பிக் கொள்ளும்படி, தேவ ஆலோசனைகளை, எச்சரிப்புக்களை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கின்றது. இன்று சில விசுவாசி கள் வேதத்தை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்திய வேதத்தின் அடிப்படை அம்சங்களை மறந்து போய்விடுகி ன்றார்கள். சில வேளைகளிலே 'என்ன பிரசங்கம் ஒரே மாதிரித்தான் போகின்றது. இந்த செய்தியை எத்தனை முறை கேட்டுவிட்டோம்' இப்படியாக கூறி, சில வேளைகளிலே தங்கள் செவிகளை அடைத்து, இருதயத்தை கடின ப்படுத்திக் கொள்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ ஊழியராக பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தின் 3ம் அதிகாரத் திலே, 'எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.' என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே, பழைய பிரசங்கம் என்று கூறி, வேதத்திலுள்ள ஆலோசனைகளை மற ந்து, பழைய பாவங்களை பாரா முகமாக விட்டு விடாதிருங்கள். சத்திய ஆவியனாவருக்கு இடங்கொடுங்கள். அவர் உங்களை சகல சத்தியத்தி லும் வழிநடத்தி செல்வார்.
ஜெபம்:
ஆலோசனையின் தேவனே, முன்னர் கற்றுக் கொண்டவைகள்,பழைய பாடங்கள் என்று கூறி, வாழ்வின் அடிப்படை அம்சங்களை மறந்து விடாமல், வேததத்தின் ஆலோசனைகள் ஏற்று அதன்படி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-2