தியானம் (சித்திரை 15, 2026)
கிறிஸ்துவை சேர்ந்தவர்கள்...
1 கொரிந்தியர் 11:1
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
பொதுவாக வாழ்வில் இலட்சியத்தோடு வாழும் மனிதர்கள் தங்களுக் கென்று ஒரு வழிகாட்டியை வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, பிள்ளைகள் பெற்றோரை அல்லது ஒரு மூத்த சகோதரை, மாணவர்கள் தங்களுக்கு பிரியமான ஆசிரியர் ஒருவரை, விசுவாசிகள் தங்களுக்கு பிடித்த போதகரை, இப்படியாக நம்பிக்கைக்குரிய அறிவுரையாளர்களை, உடனிருந்து உதவுபவரை (Mentor or Mentorship) ஏற்படுத்திக் கொள்வார்கள். 'தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்' என்றும் 'ஆலோசனையி ல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.' என்றும் பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். அதாவது, தேவனுக்கு பயந்து அவர் வழியிலே வாழ்பவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. முத லாவது, ஆலோசகர்கள் யாரைப் பின்பற்றுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த வேதாகமம் கூறுவதைப் போல் பர லோகத்திற்கு செல்லும் ஒரே வழியாகிய ஆண்டவர் இயேசுவை அவர்கள் பின்பற்றியிருந்தால், அவர்களுடைய ஆலோசனைகளும் பரலோக த்திற்குரியவைகளாக இருக்கும். ஆனால், ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல், வேறு வழிகளை பின்பற்று கின்றவர்களின் ஆலோசனையானது, ஆலோசகர்கள் சென்றடையும் இடத்திற்கே இட்டுச் செல்லும். அக்காலத்திலே, கொரிந்து என்னும் சபை யிலே, பாகுபாடுகளும், பிரிவினைகளும் உண்டாயிற்று. எப்படியெ ன்றால்: ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் இன்னுமொருவன் தான் பேதுருவை சேர்ந்தவனென்றும் மனுஷர்களைக் குறித்து மேன்மைபா ராட்டி தங்கள் ஆவிக்குரிய நிலைமையிலிருந்து விலகி மாம்சத்திற்குரிய எண்ணமுள்ளவர்களானார்கள். ஆதலால், தேவ ஊழியராகிய பவுல், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் என்று தெளிவாக அறிவுரை கூறியிருக்கின்றார். தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவர்கள், மற்றவர்களையும் நித்திய வழியாகிய ஆண்டவர் இயேசுவினிடத்திலே நடத்துகி ன்றார்கள். எனவே, எப்போதும் ஆண்டவர் இயேசுவை உங்கள் மாதிரியாக வைத்து முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்:
என்மீது அன்புகூர்ந்த தேவனே, நீர் இந்த உலகத்திற்கு அனுப்பிய உமது திருக்குமாரனாகிய மீட்பர் இயேசுவை நான் எப்போதும் பின்பற்று கின்றவனாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 15:5