புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2026)

தேவனுக்கு உகந்த பலி

கலாத்தியர் 5:13

சகோதரரே, நீங்கள் சுயா தீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.


அக்காலத்திலே வாழ்ந்து ஆண்டவர் இயேசுவினால் தெரிந்தெடுக்கப்பட்ட சீஷர்கள், இயேசுவின் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். தேவ ஊழி யராகிய பவுல் கூறியதைப் போல, 'நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்;' என்ற பிரகாரமாக, தங்களுக்காக தம் ஜீவ னைக் கொடுத்த தங்கள் எஜமானனாகிய இயேசுவிற்காக சந்தோஷத்தோடே தங்கள் ஜீவனையும் கொடுத் தார்கள். 'சிலர் நிந்தைகளையும் அடி களையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட் சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த் துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். இந்நாட்களிலே, பெரும்பான்மையான விசுவாசிகள், சுவிசேஷத்திற்காக அத்த கைய பாடுகளை படும்பம்படியான நிலைக்கு தள்ளப்படவில்லை. சுதந்திரத்தோடு ஆண்டவர் இயேசுவை சேவிக்கும்படியாக சிலாக்கியத்தை பெற்றிருக்கின்றார்கள். அப்படியிருந்ததும், ஒரு சிலர், தாங்கள் பெற்றிருக்கும் சுதந்திரத்தை தங்கள் இச்சைகளை நிறைவேற்றி, அதை நியா யப்படுத்தும்படி, வேத பிரணமாணங்களை புரட்டுகின்றார்கள். நீங்கள் ஆண்டவர் இயேசுவுக்காக தீங்கநுபவிக்கும்படி ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றீர்களா? உங்களை குறித்து மற்றயவர்கள் காரணமின்றி அவதூறு பேசும் போது, குடும்பத்திலே, சபையிலே, வேலை செய்யும் இடங்களிலே கலகங்களை ஏற்படுத்தாமல, அதை சகித்துக் கொண்டு, உங்களை தேவனிடத்தில் ஒப்படைக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்கி ன்றீர்களா? அல்லது உடனடியாக உங்கள் மாம்ச இச்சையாகிய சுயநீதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர்களாக பிரிவினைகளுக்கு காரணராக மாறிவிடுகின்றீர்களா? பிரியமானவர்களே, அநியாய ங்களை நடப்பிக்கின்றவர்களில் யார் தேவநீதிக்கு தப்பிப் போக முடியும்? தன் கட்டுப்பாட்டிலிருக்கும்; மாம்ச இச்சைகளை சிலுவையிலே அறைய ஆயத்தமில்லாதவன், எப்படி உபத்திரவத்திர காலத்திலே சத்தி யத்திலே நிலைநிற்பான்? உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

என்னை மறுபடி ஜெநிப்பித்த தேவனே, நான் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை, என் இச்சைகளை நிறைவேற்றும்படி அனுரியாமல், உம்முடைய திருச் சித்தத்தை நிறைவேற்றுகின்றவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:16