புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2026)

சுகந்த வாசனையாக ஒப்புக்கொடுங்கள்

எண்ணாகமம் 15:7

கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.


பழைய ஏற்பாட்டின் நாட்களிலே, தேவனாகிய கர்த்தர் பலிகளை குறி த்து கூறும் போது, ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கடா மற்றும் காளையை பலி யான செலுத்தும் போது, அந்தப் பலிப்பீடத்தண்டையிலே பானபலி யாக, திராட்சை இரசமானது வார்க்கப்பட வேண்டும் என்று கூறினார். ஒருவன் மனதார அதைச் செய்யும் போது, அது கர்த்தருக்கு சுகந்த வாசனையாக இருக்கும். இந்த கிரியையானது, ஒருவன் தேவனுக்கு ஆராதனையாக தன்னை அர்ப ணிப்பதின் அடையாளமாக இருக்கும். தேவ ஊழியராகிய பவுல், சிறையிலிருந்து, பிலி ப்பிய சபைக்கு எழுதும் போது, 'மேலும், உங்கள் விசுவாசமா கிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப் போனா லும், நான் மகிழ்ந்து, உங்கள னைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.' என்று கூறினார். இதற்கு முன்னதாக, 'தேவனுடைய மாசற்ற பிள்ளை களாக இருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க் கிப்பில்லாமலும் செய்யுங்கள்' என்று கூறிய அவர், இப்போது, தன்னு டைய வாழ்க்கையின் முடிவானது, மற்றவர்களை தேவனுக்கு ஆதயத்ப் படுத்தும், தேவ சேவையிலே முடிந்து போனாதும், அதை முறுப்முறு ப்போடல்ல, அரை மனதோடல்ல, சந்தோஷத்தோடே தேவனுக்கு சுகந்த வாசனையாக தன் வாழ்க்கைகை ஒப்புக் கொடுப்பேன் என்று கூறுகி ன்றார். தேவ ஊழியராகிய அவர், சிறையிலிருப்பதற்கு எந்தக் குற்றத் தையும் செய்யவில்லை. மாறாக, மற்றவர்கள் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காக, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்தார். அதனால், அவர்மேல் கோபமடைந்த அதிகாரிகள், தவறான குற்றச்சாட்டாடுகளை அவர்மேல் சுமத்தி, அவரை சிறையிலிட்டிருந் தார்கள். அந்த நிலைமையிலும், தேவனுக்காக தான் தீங்கநுபவி ப்பதை சந்தோஷத்தோடே ஏற்றுக் கொண்டார். தனக்கு நீதியின் கீரிடம் உண்டு என்பதை அவர் நிச்சயித்திருந்தார். அதுமட்டுமல்ல, அந்த கீரிடத்தை பெறும் நாளிலே, இன்னும் அதிக மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் தன க்கு உண்டாயிருக்கும்படிக்கு, பிலிப்பிய சபையிலுள்ள விசுவாசிகளும், உபத்திரவங்கள் பாடுகள் மத்தியிலே, முறுமுறுப் பையும், வாக்குவாத ங்களைவிட்டு, சந்தோஷத்தோடே தேவனுக்கு சேவை செய்யும்படி தங் களை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவராக இரு ந்தார். அதுபோலவே, உங்கள் நற்கிரியைகள் தேவுனுக்கு சுகந்த வாச னையாக இருக்கும்படி முறுமுறுப்பில்லாமல், முழுமனதோடே செய்யு ங்கள்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்தறிகின்ற தேவனே, அசதியாய், மன கசப்போடு நற்கிரியைகளை செய்யாமல், உம்முடைய நாமத்தினிமித்தம் முழுமனதோடும் சந்தோஷத்தோடும் நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:8