புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2026)

தேவ பக்தியுள்ளவர்கள் யார்?

யாக்கோபு 1:26

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.


அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக் கக்கடவர்கள்;. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பி க்கமாட்டாதே. ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங் கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங் கள். அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதி ன்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய் யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான். என்று யாக்கோபு 1ம் அதிகார திலே வாசிக்கின்றோம். இந்த வசனங்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். சில குறப்புக்களைப் பார்போம். ஒன்று: நாம் சத்திய வசனத்தி னாலே மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டோம். இரண்டு: அந்த வசனத்தை கேட் கவும் அனதன்படி செய்யவும் ஆவலுள்ளவர்களாக இருக்க வேண்டும். மூன்று: வாயின் வார்த்தையைக் குறித்த எச்சரிக்கை அதாவது, கோபத்தை அடக்க வேண்டும். பொறுமையோடு பேச வேண்டும். பிரியமானவர்களே, கேட்ட வார்த்தைகளுக்கேற்ப கிரியைகள் காணப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, ஒருவன் கிரியைகளை நடப்பித்தும், தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். எனவே, தேவ வசனத்தின்படி நற்கிரியைகளை செய்து கொண்டு, திருவசனத்திற்கு எதிரான முறுமுறுப்புக்களையும், வாக்குவாதங்களையும் விட்டுவிடுங்கள்.

ஜெபம்:

உம் வார்த்தையால் என்னை உருவாக்கிய தேவனே, உம்முடைய வார்த்தைக்கு விரோதமான பேச்சுக்களையும், செய்கைகளையும் நான் விட்டுவிட பிரகாரமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:10