தியானம் (சித்திரை 05, 2026)
ஜெயங்கொண்ட இயேசு நம்மோடிருக்கின்றார்
யோவான் 20:20
சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். ஆண்டவராகிய இயேசுதாமே தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, தம்முடைய சீஷர்களை தேற் றும்படிக்கு பற்பல காரியங்களை குறித்து அவர்களுக்கு கூறியிருந்தார்கள். 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.' என்று கூறிய பிரகாரம், சீஷர்களடைய துக்கம் சந்தோஷமாக மாறியது. தங்கள் வாழ்க்கையிலே இனி என்ன நடக்கும் என்று நம்பிக்கையற்றிருந்தவர்கள், எல்லாம் முடிந்தது என்று தங்கள் எஜமானானனாகிய இயேசு சிலுவையிலே கூறிய வார்த்தையின் கருப்பொருயை உணர ஆரம்பித்தார்கள். சிலவேளைகளிலே, விசுவா சிகளினுடைய வாழ்க்கையிலே, விசுவாசமானது சோதனைக்குட்படுத் தப்படும் போது, மனந்தளர்ந்து சோர்ந்து போய்விடுகின்றார்கள். சத்திய வார்த்தைகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தை மறந்து போய்விடு கின்றார்கள். சில சமயங்களிலே, இந்த உலகிலே உண்ணவும், குடிக்கவும், உடுத்தவுதற்காவே தேவ வார்த்தைகள் கொடுக்கப்பட்டிரு க்கின்றது என்று எண்ணி, தேவ வார்த்தையின் கருப்பொருளை மறந்து போய்விடுகின்றார்கள். 'என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். ஊலக த்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்' என்று ஆண்டவராகிய இயேசு தம் முடைய சீஷர்களுக்கு கூறினார். இந்த வார்த்தைகள் ஜீவனுள்ளது. மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து ஆண்டவராகிய இயேசு தம்முடையவர்களோடு என்றென்றும் இருக்கின்றார். எனவே, நம்பிக்கை யற்ற வேளைகளிலே, இயேசு கிறிஸ்துவிலிருந்த சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். அவர் பிதா சொன்னவைகளை சொன்னபடி செய்தார். பிதவோ, அவருக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை கொடு த்தார். அதுபோல, உங்களுடைய நற்கிரியைகள் ஒன்றும் வீண் போவதில்லை. அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனை தரும் தேவன் நம்க்கிருக்கின்றார்.
ஜெபம்:
அநாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்த தேவனே, உம்முடைய அநாதி தீர்மானம் என்னிலே நிறைவேறும்படி உம்முடைய வார்த்தையிலே நான் எப்போதும் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 1:18