தியானம் (பங்குனி 28, 2026)
தேவ சித்தமே அனுதின போஜனம்
யோவான் 4:34
நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமா யிருக்கிறது.
மீட்பராகிய இயேசுதாமே சிலுவையிலே அறையப்பட்ட போது, 'அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலு வையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷpத்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப் பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொ ழுது சிலுவையிலிருந்து இறங்கி வர ட்டும், அப்பொழுது இவனை விசுவா சிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சி க்கட்டும் என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தி த்தார்கள்.' ஆனாலே தேவ குமாரனாகிய இயேசுவோ, நீடிய பொறுமை யுள்ளவராக நிந்தையையும் அவமானத்தையும் சகித்தார். பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே அவரு டைய போஜன மாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் பிதாவினுடைய சித்தப்படியே நிறைவேற்றி முடித்தார். 'ஆதலால் தேவன் எல்லாவற் றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமி யின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதா வாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவு கள் யாவும் அறிக்கைபண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.' என்று பிலிப்பியர் 2ம் அதிகாரம் 9ம் வசனதிலிருந்து 11ம் வரை வாசிக்கலாம். அது போலவோ, ஆண் டவராகிய சிந்தையைத் தரித்தவர்களுக்கும், தங்களுக்குரி யதை மட்டும் நோக்காமல், பிறருக்கானவைகளையும் நோக்குகின்றவர்களுக்கும், பிதா வாகிய தேவனின் சித்தத்தை தங்கள் வாழ்க் கையில் நிறைவேற்றறுகி ன்றவர்களை போஜனமாக கொண்டவர்களும். ஒருவரும் அறியாத பர லோக மேன்மைகளை கொடுப்பேன் என்று வாக்குரைத்திருக்கின்றார்.
ஜெபம்:
உம்முடைய குமாரனுடைய சாயலை அடையும்படி என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களை கண்டு நான் பின்வாங்கி சோரந்து போகாமல் இருக்க கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 23:12