புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2026)

மனத்தாழ்மையுடையவர்களாக இருங்கள்

எபேசியர் 4:2

மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவனின் தகப்பனானவர் நோய் வாய்பட்டு வைத்திய சாலையிலே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவனு டைய உற்றார் உறவினர்கள் செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த வாலிபனுடைய குடும்பத்தை தள் ளிவிட்டார்கள். அவனுடைய குடும்பம் வறுமைக்கோட்டிற்குள் வாழ்ந்து வந்தபடியால், அவனுடைய தகப்ப னானவருடைய இறுதி நாட்களிலே, அவருக்கு தேவையான ஊட்டச்சத் ததுள்ள உணவைக் கொடுக்கக்கூட அவர்களுக்கு முடியாமல் இருந்தது. உற்றார் உறவினர் எவரும் அவர்க ளுக்கு ஆதரவாக இருக்கவில் லை. ஆண்டவர் இயேசு அந்த வாலி பனை சந்தித்தார். அவன் வழியாக அவனுடைய குடும்பத்தாரின் நிலைமையை மாற்றினார். ஆண்டுகள் கடந்து சென்று அவர்களுடைய குடும்ப நிலைமைகள் நன்மைக்கேது வாக மாற்றம் கண்டபோது, இவர்களை தள்ளி வைத்த உற்றார் உறவி னர், சொந்தம் கொண்டாடும்படி வழி தேடினார். அவர்களுடைய உற் றார் உறவினர், அவர்களை அல்ல, அவர்களுக்கு தற்போது ஏற்பட் டிக்கும் அந்தஸ்த்தையே விரும்பினார்கள். அந்த வாலிபனோ, தன் மனதிலே மேட்டிமையடையாமலும், மனமேட்டிமையுள்ளவர்களோடு இசை ந்து போகாமலும், தாழ்மையுள்ள இருதயத்தோடு, வறியர்கள், எளி மையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஆதரவாய் இருந்து வந்தான். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, ஒரு வேளை உங்கள் குடும்பத்திலே கல்வி, செல்வாக்கு பெருகும் போது, உங்களை தள்ளி வைத்தவர்கள் உங்களோடு உறவு கொண்டாட முற்படுவார்கள். அதேபோல, உங்கள் குடும்பத்தின் நிலைமையாகனது தாழ்ந்து போனால், பலர் உங்களைவிட்டு தங்களைத் தூரப்படுத்திக் கொள்வார்கள். நீங்களோ, உங்கள் தாழ்மையின் நாட்களிலே உங் களை ஆதரித்தவர்களை மறந்து போய்விடாதிருங்கள். பொருளாதார நிலைமைகள் உயரும்போது, ஏழை எளியவர்களை மறந்து போய் விடாதிருங்கள். இன்னும் அதிகமாக அவர்களை தாங்குங்கள். பூலோ கத்திலுள்ளவைகளையல்ல, பரலோகத்திலுள்ள மேன்மையானவைகளை நாடுங்கள். இந்த பூமியிலே பொக்கிஷங்களை சேர்த்து வைக் காமல், பரலோகத்திலே உங்கள் முதலீடுகளை அதிகமதிகமாக செய் யுங்கள். பரம பிதாவைப்போல இரகத்திலே ஐசுவரியமுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கின்ற தேவனே, நீர் எனக்கு தந்த மேன்மையான வாழ்வை மறந்து போகாமல், திவ்விய சுபாவங்களிலே வளர எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:8