தியானம் (பங்குனி 22, 2026)
மாறாத தேவனின் பிள்ளைகள்
கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், எல்லா விதத்திலும் சமுதாயத்தினாலே தள்ளப்பட்டிருந்தான். அவனிடம் துன்மார்க்கமான பழக்கவழக்கங்களும் இருந்தது. உலகத்திலே வாழ்ந்து வந்த மனிதர்கள் அவனை ஒரு பொருட்டென்று எண்ணவில்லை. அவன் தன் வாழ்வின் அழிவின் பாதையிலே சென்றுகொண்டிருக்கும் போது, ஒருநாள், ஆண் டவர் இயேசு அவனை சந்தித்தார். அவன் வாழ்க்கை மாற்றப்பட்டது. தன் வாழ்க்கையிலே புதிய அர்த்தத்தை கண்டு கொண்டான். இரட்சிப்பின் சந்தோஷத்தை அடைந்து கொண்டான். ஊரிலே சபை ஐக் கிமொன்றிலே இணைந்து கொண்டான். அந்த சிறிய சபையிலே எளிமையான வாழ்க்கை வாழ்ந்த விசுவாசிகள் அவனை ஏற்றுக் கொண்டு அன்பு செய்தார்கள். தேவனுக்கென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று தன் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தான். ஆண்டுகள் கடந்து சென்றபின்பு, ஊர் மக்கள் மத்தியிலே கனத்தை பெற்றுக் கொண்டான். காலங்கள் கடந்து சென்ற பின்பு, தன்னை தள்ளி வைத்த உலககை மறந்து, அற்பமாக எண்ணப்பட்ட காலங்களிலே தன்னை நேசித்த சபையோரை மறந்து, உலகிலே செல்வாக்கோடு வாழ்கின்றவர்களின் நட்பை மேன்மைப் படுத்தினான். தேவனுடைய ஊழியன் என்று தன்னை அறிமுகப்படுத்துவதைவிட, ஊரிலுள்ள இன்னாருக்கு நான் அறிமுக வானவன் என்பதை மேன்மையாக எண்ணிக் கொண்டான். தேவனை அறிந்தும் உணர்வற்றனாக மாறிவிட்டான். பிரியமான சகோதர சகோதரி களே, அந்த மனிதனுடைய பரிதாபமான நிலைமையை சற்று சிந்திது ப்பாருங்கள். இதற்கொத்த நிலைமைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கை அனுபவத்திலே கண்டிருக்கலாம். நம்முடைய பிதாவாகிய தேவன் தம்முடைய சுபாவத்திலே மாறிப் போகின்றவர் அல்லர். அவருக்கு பிள் ளைகளாகும்படி அழைக்கப்பட்ட நாமும், அவரைப் போலவே வாழ வேண்டும். ஒருவேளை சுற்றியிருக்கின்ற மனிதர்கள், சக விசுவாசிகள் மாறிப்போனாலும், அவர்கள் தங்கள் வாழ்விலே நன்றியறிதலுள்ள வர்களாக இருக்காவிட்டாலும், அவர்கள் நிமித்தம் நாம் சோர்ந்து பின்வாங்கி, நற்கிரியைகளில் ஓய்ந்து போய்விடக்கூடாது. அவர்களுக்கு பாடம் படிபிக்க வேண்டும் என்று எங்களுக்கிருக்கும் உலக மேன்மை களை மறுபடியும் நாம் தலைக்கு மேலாக உயர்த்திவிடக் கூடாது. தேவன் அழைத்த அழைப்பின் மேன்மையிலே தரித்திருக்க வேண்டும். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
ஜெபம்:
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, நீர் எனக்கு தந்திரு க்கும் மேன்மையான அழைப்பை ஒருபோதும் மறந்து போகாலும், அற்ப காரியங்களுக்காக அதை இழந்து போகாமல் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 2:7