தியானம் (பங்குனி 21, 2026)
'தாழ்மையிலே மனமில்லாதவர்கள்'
1 தீமோத்தேயு 6:18
நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்,
திரளான செல்வம், உயர்ந்த கல்வி, உலகத்தின் செல்வாக்குகள் போன்றவற்றிலே மனிதர்கள் மேன்மை பாராட்டுகின்றார்கள். விசுவரிகள் யாவரும், இவற்றிற்கு முற்றிலும் விதிவிலக்கானவர்கள் என்று கூறிவிட முடியாது. இன்று மட்டுமல்ல, சபையின் ஆரம்பகாலத்திலேயே இத்தகைய தன்மைகள் விசுவாசிகள் மத்தியிலே காணப்பட்டது. அக் காலத்திலே, தேவ ஊழியராகிய யாக் கோபு, விசுவாச மார்க்க்தாரை நோக்கி: என் சகோதரரே, மகிமையுள்ள நம் முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்ச பாதத்தோடே பற்றிக்கொள்ளாதி ருப்பீர்களாக. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன் னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரி யவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக் குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல் லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? உங் களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாண த்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். பட்சபாதமுள்ள வர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப் பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்' என்று கூறியிருக்கின்றார். இப்படிப்பட்ட வேற்றுமைகள் ஒரு விசுவாசிகயின் மனதிலே வளரும் போது, ஒருவேளை அவன் உலக ஐசுவரியமுள்ளனாக இருக்கலாம். ஆனால் அவனுடைய மனமேட்டிமையினால் அவன் தன்னை ஆவிக்குரிய வறுமைக்கு ஒப்புக் கொடுக்கின்றவனாக இருக்கின்றான். நீங்கள் நற்கிரியைகளிலே வளர்ந்து பெருகின்றவர்களாக இருங்கள்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உமக்கு முன்பாக நான் தெய்வீக சுபாவத்திலே தரித்திரனாக காணப்படாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:10