தியானம் (பங்குனி 20, 2026)
பெரியவன் யார்?
சங்கீதம் 138:6
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
வேலை செய்யும் இடங்களிலே, தாழ்விடங்களிலிருந்து, உயர்ந்த ஸ்தானங்களுக்கு ஏறிச் செல்பவர்கள், தங்கள் உயர்ந்த நிலையை குறித்து மேன்மை பாராட்டுவார்கள். தாங்கள் இருந்து வந்த தாழ்விடங்களிலே தற்போது இருப்பவர்களை மேட்டிமையான கண்களோடு பார்க்கின்றார்கள். வாழ்க்கை தரத்திலே, தங் களுக்கும் அவர்களுக்கும் இடை யிலே நெருங்கமுடியாத இடை வெளிகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு பற்பல நியாங்களையும் கூறிக் கொள்வார் கள். இது தேவ ஆசீர்வாதம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். இப்படியான மனநிலைமையானது ஏற்புடையதா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட நிலைமையானது, சில இடங்களிலே, தேவ ஊழியர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரிடத்திலும், அங்காங்கே காணக்கூடியதாக இருக்கின்றது. சிலர், மூப்பர், மேய்ப்பர், போதகர், சுவிசே ஷகர், தீர்க்கதரிசி, அப்போஸ்தலர் என்று படிகளிலே ஏறிச் செல்வதைப் போல, தங்கள் ஆசனங்களை உயர்த்திக் கொள்கின்றார்கள். கர்த்தராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, தம்மு டைய சீஷர்களுடைய 'கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோ க்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவ ருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.' என்று மனத்தாழ்மையையும், கீழ்படிவையும் கற்றுக் கொடுத்தார். ஒருவரும் ஏறிப்போகமுடியாத உன்னதமான உயர்விடத் திலே இருந்த ஆண்டவராகிய இயேசு தாழ்விடத்திற்கு இறங்கி வந்தார். 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.' ஆனால், கிறிஸ்துவின் சிந்தையை தரிக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள் சில வேளைகளிலே இந்த சத்தியத்தை மறந்து போய்விடுகின்றார்கள். நீங்ளோ கிறிஸ்துவின் சிந்தையிலே வளர்ந்து பெருகுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவைப் போல மனத்தாழ்மையும், கீழ்படிவும் உள்ளவனாக வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 13:16