தியானம் (பங்குனி 19, 2026)
'மங்கலான வெளிச்சம்'
யோவான் 8:12
என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந் திருப்பான் என்றார்.
ஒரு வாலிபனானவன், தன் அறைவீட்டிற்குள் இருந்த மின்குமுலின் வெளிச்சத்தை தணித்து, மங்கலான வெளிச்சத்திலே தன் அறைவீட்டை அழகாக ஒழுங்கு படுத்தியிருந்தான். இரவிலோ அல்லது பகலிலோ அந்த அறையை பார்க்கும் போது, அழகாகவும் ஒழுங்காகவும் காட்சி யளித்தது. ஒரு நாள் அந்த அறைவீட்டிற்குள் சில திருத்த வேலைகளை செய்யும்படிக்கு, தகப்பனானவர், பிர காசிக்கின்ற வெளிசமுள்ள மின்கு முலை போட்ட போது, அந்த அறை யிலே எவ்வளவாய் தூசி படிந்திரு ப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார். அந்த அறையிலிருந்து குறைகள் யாவும் அந்த வெளிச்சத்திலே தெளிவாக தெரிந்தது. பிரியமான சகோதர சகோதரிகளிலே, ஒளியையும், இருளை யும் பற்றி பேசும் போது, உடடி னாயாக விசுவாசிகள், உலகத்தார் இருளிலே வாழ்கின்றார்கள் என்றும், தாங்கள் ஒளியிலே இருக்கி ன்றோம் என்றும் சொல்லிக் கொள்வார்கள். விசுவாசிகள் மெய்யான ஒளியை அறிந்திருக்கின்றார்கள். ஆனால், சிலரோ, அந்த ஒளியானது தங்கள் வாழ்விலே பிரகாசிக்காதபடிக்கு, விளக்கை தணித்து விடுகின்றார்கள். ஏன் அப்படி தணித்து விடுகின்றார்கள்? 'ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவை களாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியை ப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகை க்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வரு கிறான்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். நம்முடைய பரமபிதா மங்கி எரியும் திரியை அணைத்து விடுகின்றவர் அல்ல. மாறாக அது வெளிச்சம் வீசும்படி சுத்திகரிக்கின்றார். தேவனாகிய கர்த்தர் விளம்பிய வேதமே நம்முடைய வாழ்வின் வெளிச்சமாக இருக் கின்றது. வேதத்தை வாசிக்காமல், அந்த வார்த்தைகளை மறந்து போகி ன்றவர்கள், தங்கள் வாழ்வின் விளக்கை தணித்து விடுகின்றார்கள். நீங்கள் அப்படி இருக்காமல், வார்த்தையின் வெளிசத்திலே நடக்க உங்களை ஒப்புக் கொடுங்கள். வேதத்தை அனுதினமும் வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கை அந்த வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள். நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
பரலோகத்திலிருக்கின்ற எங்கள் தேவனே, என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்ற உம்முடைய வேதத்தை நான் பின்பற்றி நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங் 119:105