புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2026)

கிறிஸ்துவின் சாயலிலே பெருகுங்கள்

1 கொரிந்தியர் 11:1

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.


தேவ ஊழியராகிய பவுல், சிறையிலிருந்து, பிலிப்பு பட்டணத்திலுள்ள சபைக்கு எழுதிய நிரூபத்தின் இரண்டாம் அதிகாரத்தை தியானித்து வருகின்றோம். அவர் கிறிஸ்துவின் சிந்தையை தரிப்பதின் அவசிய த்தை கிறிஸ்துவை பின்பற்றுகின்றவர்களுக்கு வலியுறுத்தி கூறியிருக்கி ன்றார். இந்நாட்களிலே, தபசு காலம் என்று பலர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும்படி பல ஒறுத்தல்களையும் தானதர்மங்க ளையும் செய்து வருகின்றார்கள். அவை களிலே நன்மை உண்டு. விசுவாசிகள் மாத்திரமல்ல, இந்த உலகத்திலுள்ள பல மனிதர்கள் பெருமளவிலே செய்து வருகின்றார்கள். விசுவாசிகளாகிய நாம், நாம் தாபரிக்கும் ஊராகிய பரம தேசத்தை நோக்கி சென்று கொண்டிரு க்கின்றோம். உள்ளான மனிதன் நாளு க்கு நாள் புதிதாக்கப்பட வேண்டும். மனமாற்றம் வேண்டும். மறுரூப மடைய வேண்டும். எனவே, தானதர்மங்கள், ஒறுத்தல்கள், உபவாசங்க ளோடு நின்று விடாமல், மேலானவைகளை நாடுங்கள். யாரும் காணா தமுடியாத எங்கள் உள்ளந்தரியத்தை, தேவனாகிய கர்த்தர் ஆராய்ந் தறிகின்றார். சிலருடைய மனதிலே கசப்பு என்ற விஷம் கலந்திரு க்கலாம். வேறு சிலர், சிலரைக் குறித்த வன்மம், பகை, பிரிவினை போன்றவற்றை தகுந்த காரணங்களை காட்டி உள்ளே வைத்திருக்க லாம். விட்டுவிட முடியாத கோபம், எரிச்சல், பொறாமை போன்ற மாம்ச இச்சைகள் உள்ளே மறைந்திருக்கலாம். இன்னும் பற்பல மாம்ச சிந்தைகள் அவ்வப்போது தலைதூக்கி விடாமல். பரலோகத்திலிருக் கின்ற பரமபிதா தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளை அருளுகின்றார். தம்முடையவர்களை பெலப்படுத்தி வழிநடத்தும் தம்மு டைய தூய ஆவியை கொடுத்திருக்கின்றார். பெலவீன நேரங்களிலே கிருபை அளிக்கின்றார். நம்மால் விட முடியாமல் இருக்கும் சுபாவங் களைவிட்டுவிட அவர் போக்கை உண்டு பண்ணுகின்றவராக இருக்கி ன்றார். எனவே, ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவு கூரும் இந்த நாட்களிலே, அவரைப் போல மாறும் படிக்கு, உங்கள் உள்ளத்தை முற்றும் முழுவதுமாக ஒப்புக் கொடுங்கள். இப்படியாகவே தேவ ஊழியராகிய பவுல் கிறிஸ்துவை பின்பற்றினார். அதைப் போலவே நாமும் கிறிஸ்துவை பின்பற்றும்படி நமக்கு ஆலோசனை கூறியிருக்கின்றார். அந்தப்படி நாம் கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து பெருகுங்கள்.

ஜெபம்:

கிறிஸ்துவின் சாயலிலே வளரும்படி என்னை அழைத்த தேவனே, வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் இருந்தால், அவைகளை உணர்த்தி, விட்டுவிடும்படியான போக்கை எனக்கு உண்டுபணும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 5:1