தியானம் (பங்குனி 10, 2026)
எதை செய்து காட்டுகின்றீர்கள்?
பிலிப்பியர் 2:6
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
'முதலாவதாக நானும் என் குடும்பமும். மற்றவர்களுடைய காரியங் களை பார்க்க முன்பு, என் பிள்ளைகளுடைய காரியங்களை பார்க்க வேண்டும்' இப்படியாக விசுவாசிகள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சொந்த குடும்பத்தையும் பிள்ளைகளையும் விசாரிக்க வேண்டும் என்பது உண்மை. மற்றவர்களுக்கு உதவி செய்ய உங்களை கவ னைத்தை செலுத்த முன்பு, எந்த அளவிற்கு உங்கள் சொந்த குடும்பத்தை விசாரிக்க போகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகளைவிட அதிகமாக அடிப்படைத் தேவைகளோடு இருக்கும் திக்கற்ற பிள்ளைகளை ஆதரிக்க முன்பதாக, எவ்வளவு காலம் பிள்ளைகளுடைய விவகாரங்களை கவனிக்கப் போகின்றீர்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள்! பெற்றோர் எதை கூறுகின்றார்கள் என்று பார்த்தை அதை செய்வதைவிட அதிகமாக, பெற்றோர்கள் எதை செய்து காட்டுகின்றார்கள் என்பதையே பிள்ளைகள் கவனிக்கின்றார்கள். 'பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.' என்று நீதிமொழிகள் 22ம் அதிகாரம் 6ம் வசனத்திலே வாசிக்கின்றோம். அவனவன் தனக்கானவைகளை மட்டும் நோக்காமல், பிறருக்கானவைகளையும் நோக்க வேண் டும் என்பதை எப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து, நடைமுறையிலே செய்து காண்பிக்கப் போகின்றீர்கள்? கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை எந்த வயதிலே பிள்ளைகளுக்கு சொல் லிக் கொடுக்கப் போகின்றீர்கள்? பிள்ளைகளை விசாரிப்பதென்பது, அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்து அவை களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதா? எதை பிள்ளைகளின் வாழ்விலே நீங்கள் முக்கியத்துவப் படுத்துகின்றீர்களோ அவர்கள் அதையே பற்றிக் கொள்வார்கள். எனவே, சிறிய வயதிலிருந்து, மேலானவைகளை நாட கற்றுக் கொடுங்கள். இந்தப் பூமிக்குரியவைகளையல்ல, பரலோகத்திற்குரியவைகளை நாடித் தேடி அதைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று முதலாவதாக பெறறோர் தங்களை மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு பணம் பொருள் குறைவாக இருக்கும் போதும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் உண்மையான மனம் இருக்கும் போது, அந்தரங்கத்திலிருந்து இருதயத்தை ஆராய்ந்து அறியும் பரம பிதா, அவன் மேல் பிரியமாக இருப்பார் அல்லவோ! நிச்சயமாக பிரியமாக இருந்து, அவனுடைய சந்ததியை எல்லா வற்றியும் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
என் இருதயத்தை அறிந்த என் தேவனாகிய கர்த்தாவே, நான் பிறனுக்கானவைகளைக் குறித்து எப்போதும் கரிசணை யுள்ளவர்களாக இருக்கும் மனதை எனக்கு தந்து என்னை உம்முடைய வழியிலே நடத் திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 112:9