தியானம் (பங்குனி 08, 2026)
அநாதி தீர்மானமே இலக்கு!
1 கொரிந்தியர் 10:31
எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் கூடாதே.
உலகிலே இயங்கி வரும் வியாபார நோக்கையுடைய ஸ்தாபனங்கள், எப்போதும் தங்களை ஒத்த வியாபாரம் செய்யும் மற்றய ஸ்தாபன ங்களின் செயற்பாடுகளை கவனமான கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். போட்டியாளர்கள் ஒரு இடத்திலே குறிப்பிட்ட வியாபாரத்தை ஆரம்பித்தால், உடடினடியாக தாங்ளும் அதற்குரிய நடடிவடிக்கைகளை எடுப்பார்கள் அல்லது அவர்கள் குறிப்பிட இடத்திற்கு போவதற்கு முன்னர் தாங்கள் சென்று விடுவார்கள். போட்டியாளர்கள் மத்தியிலே அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வியாபார நீதி நெறிமுறைகள் உண்டு. அவற்றை பின்பற்றி கொண்டு, எப்படியாவது தங்களுடைய ஸ்தாபனமா னது, தங்கள் எஜமானனுக்கு ஆதாயத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இலாப நோக்குடன் பிரயாசப்படுகின்றார்கள். ஆனால், நாமோ ஒரே எஜமானாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றோம். பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்றுவதே நம்முடைய ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். சில சமயங்களிலே தேவனாகிய கர்த்தர்தாமே, சிலரை பிரத்தியேகமான நோக்கத்திற்காக பிரித்தெடுத்து அவர்களை சில இடங்களுக்கு அனுப்புகின்றார். அவர்கள் எதிர்நோக்க வேண்டிய சவால்கள் யாவற்றையும் மேற்கொள்ள அவர்களுக்கு வேண்டிய தலாந்துகளையும் வரங்களை யும் அவர்களுக்கு ஈவாக கொடுககின்றார். அந்த வேளையிலே, தேவனுடைய அழைப்பை பெறாத வேறு சிலர், போட்டி மனப்பான்மையோடு, தாங்கள் அந்த இடத்திற்கு முந்தி செல்ல வேண்டும் என்று, தங்கள் சுய இஷ்டப்படி அங்கு சென்று, காரியங்களை நடப்பிக்க முயற்சி செய்யும் போது, வேண்டப்படாத பிரச்சனைகளையும், தடைக ளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றார்கள். இதைக் குறித்து விசுவாசிகள் உணர்வடைய வேண்டும். ஊழிய சம்பந்தமான காரி யங்கள் மட்டுமல்ல, விசுவாசிகளுடைய வாழ்விலே, கல்வி, வேலை, வீடு, சொத்துகள், விடுமுறை என்று போட்டி மனப்பான்மையோடு வாழக்கூடாது. அவர் இப்படி செய்கின்றார், எனவே நாங்களும் அப்படி செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை வாழ்விற்கு நல்லதல்ல. எல்லாவற்றிலும், விசுவாசிகள் தங்கள் பிரதானமான நோக்கத்தை மறந்து விடக்கூடாது. நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள், நோக்க இழந்து, தேவ சித்தத்திற்கு விரோதமாக செயற்படக்கூடாது.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, வார்த்தையினாலாவது, கிரியைகளினாலாவது எதைச் செய்தாலும் உம்முடைய திருநாமம் மகிமைப்படும்படிக்கு, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 4:17