தியானம் (பங்குனி 04, 2026)
ஆறுதலை பெருகப்பண்ணுங்கள்
2 கொரிந்தியர் 1:5
எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
ஒரு ஊரிலே வாழ்ந்த விசுவாசியானவன், தன் இள வயதிலேயே சில பாடுகளுக்கு ஊடாக செல்ல வேண்டியதாயிருந்தது. நெருக்கடியின் காலங்களிலே, அதிலிருந்து வெளியேறுவதற்கு எந்த வழியும் இல்லாதிருந் தது. பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு, அவன் தன் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, எப்படியாக, அந்த உபத்திரவங்கள் யாவ ற்றிலுமிருந்து தேவன் தாமே தன்னை காத்து, விடுவித்து, வெற்றி கொடுத்தார் என்பதை சிந்திக்கும் போது, அவன் தேவனாகிய கர்த்தருடைய வழிநடத்துதலின் மேன்மையை குறித்து ஆச்சரிப்பட்டான். அதனால், அவன் தன்னைப் போல பாடுகளுக்கூடாக கடந்து செல்லும் மற்றவர்களை திடப்படுத்த ஆரம்பித்தான். தான் பெற்றக் கொண்டு தேவனுடைய கிருபையைiயும், அவருடைய உருக்கமான இரக்கத்தை யும், மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படி கிரியைகளை நடப்பித்தான். ஆம் பிரியமானவர்களே, தேவ நன்மையை பெற்றிருந்தால், அதை உங்கள் வாழ்விலே காண்பிக்க ஆரம்பியுங்கள். 'நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்க ங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவரு க்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலி னாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிற துபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆத லால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட் சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய் கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடே கூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிநஉ, உங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.' என்று 2 கொரிந்தியர் 1ம் அதிகாரம், 3ம் வசனத்திலிருந்து 7ம் வசனம் வரை வாசிக்கின்றோம். எனவே, உங்கள் அனுபவ சாட்சிகள் உங்கள் வாழ்க் கையில் கிரியைகள் வாயிலாக வெளிப்படுத்தப்படட்டும். மற்றவர்கள் நன்மையடைய வேண்டும் என்கிற சிந்தை வளரட்டும்.
ஜெபம்:
ஆறுதலின் தேவனே, என்னுடைய பாடுகளில் எப்படி கிறிஸ்துவின் ஆறுதல் பெருகுகின்றதோ, அதே பிரகாரமாக மற்றவர்களுடைய வாழ்விலே நான் ஆறுதலிக்கின்றவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:19-21